Tuesday, August 25, 2026
spot_img
HomeUncategorizedகல்வி அமைச்சர் பட்லினா தலைமையில் மலாக்கா மாநில விருது பெறும் 1,328 பேர்

கல்வி அமைச்சர் பட்லினா தலைமையில் மலாக்கா மாநில விருது பெறும் 1,328 பேர்

மலாக்கா மாநில ஆளுநர் துன் அலி ருஸ்தாம் அவர்களின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வழங்கப்பட்ட மாநில விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பெறும் 1,328 பேரின் பட்டியலில் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் முதலிடத்தில் உள்ளார்.

பட்லினா சிடேக், Darjah Gemilang Seri Melaka (D.G.S.M) விருதைப் பெற்று ‘Datuk Seri’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

அதே விருதைப் பெற்றவர்களில் மலாயா தலைமை நீதிபதி ஹாஷிம் ஹம்சா, தேசிய காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமானும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மலேசிய ராயல் விமானப்படை (TUDM) தளபதி முஹம்மது நொராஸ்லான் அரிஸ், Petronas Downstream நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சஸாலி ஹம்சா, மலேசிய தேசிய சிலாட் கூட்டமைப்பான Pesaka தலைவர் மெகாட் ஸுல்கர்னைன் ஓமர்டின் ஆகியோரும் ‘Datuk Seri’ பட்டத்தைப் பெற்றனர்.

இதனிடையே, Darjah Cemerlang Seri Melaka (D.C.S.M) விருதை 56 பேர் பெற்று ‘Datuk Wira’ பட்டத்தைப் பெற்றுள்ளனர். அவர்களில் Benut சட்டமன்ற உறுப்பினர் மொஹமட் சுமாலி ரெடுவான், Bukit Aman குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார், தேசிய திடக்கழிவு மேலாண்மைத் துறை தலைமை இயக்குநர் மொஹமட் அஸ்ஹார் அப்துல் ஹமிட் மற்றும் மலாக்கா மாநில காவல்துறைத் தலைவர் ட்ஸுல்கைரி முக்தார் ஆகியோர் அடங்குவர்.

மேலும், Darjah Mulia Seri Melaka (D.M.S.M) விருது 14 பேருக்கு வழங்கப்பட்டு, அவர்கள் ‘Datuk’ பட்டத்தால் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் சபா மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் அல் ஹம்ப்ரா ஜுஹார், உயர் நீதிமன்ற நீதிபதி சூரியா குமார் துரைராஜ் ஜான்சன் பால் மற்றும் 3ஆவது காலாட்படைப் பிரிவு தளபதி சானி எஸ். ஓமர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை, Darjah Pangkuan Seri Melaka (D.P.S.M) விருது 189 பேருக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்கும் ‘Datuk’பட்டம் வழங்கப்பட்டது.

இவ்விருதைப் பெற்றவர்களில் ஒளிபரப்பு துறை தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயில், Media Prima Berhad தொலைக்காட்சி செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு குழும ஆசிரியர் அஸ்ஹாரி முஹித்தின் மற்றும் ஜாசின், மெர்லிமாவைச் சேர்ந்த பிரபல பாடகி சியானா சைன் (Ziana Zain) ஆகியோரும் அடங்குவர்.

மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த கௌரவிப்பு விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுச் சேவையாளர்கள் மாநிலத்தின் உயரிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

Most Popular