Tuesday, August 25, 2026
spot_img
HomeUncategorizedசெப்டம்பர் 1ஆம் தேதி சிலாங்கூரில் சிறப்பு விடுமுறை!

செப்டம்பர் 1ஆம் தேதி சிலாங்கூரில் சிறப்பு விடுமுறை!

சுக்மா போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சிலாங்கூர் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி இதனை அறிவித்துள்ளார்.

சுக்மா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சிலாங்கூர் அணி, 101 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 245 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

சிலாங்கூர் அணியின் இந்தச் சிறப்பான வெற்றியைப் பாராட்டும் வகையில், செப்டம்பர் 1ஆம் தேதி சிறப்பு மாநில விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமிருதின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி சிலாங்கூர் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன், மாநிலத்தின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular