
மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கமான MATTA, செப்டம்பர் 2026 தேசிய MATTA Fair-ன் 59ஆவது பதிப்பில் Malaysia Aviation Group (MAG) மீண்டும் அதிகாரப்பூர்வ விமானப் பங்குதாரராகவும், முதன்மை அனுசரணையாளராகவும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி 2026 வரை கோலாலம்பூர், Malaysia International Trade and Exhibition Centre (MITEC)-இல் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், MAG தனது சமீபத்திய பயண சேவைகள், தொழில்நுட்பப் புதுமைகள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த சலுகைகள் Malaysia Airlines, Firefly மற்றும் Amal உள்ளிட்ட விமான சேவைகளுடன், Enrich, Journify மற்றும் MHholidays வழியாக வழங்கப்படும் வாழ்க்கைமுறை மற்றும் விடுமுறைத் திட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
MATTA தலைவர் Nigel Wong, பயணம் என்பது புதிய இடங்களையும் புதிய மனிதர்களையும் இணைக்கும் முக்கியமான அனுபவம் எனக் குறிப்பிட்டதுடன், Visit Malaysia 2026 மூலம் மலேசியா முன்னணி சுற்றுலா destination ஆக தொடர்ந்து பிரகாசித்து வருவதாக தெரிவித்தார்.
46,000 சதுர அடி MAG Arena
இந்த ஆண்டு MATTA Fair-ல் MAG, International Hall, Level 3 பகுதியில் சுமார் 46,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள MAG Arena மூலம் பிரமாண்டமான பங்கேற்பை வழங்குகிறது.
மொத்தம் 60 அரங்குகள் கொண்ட MAG Arena-வில் விமானப் பயணம், வாழ்க்கைமுறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அனுபவங்களை பார்வையாளர்கள் நேரடியாகப் பெற முடியும்.
Malaysia Airlines மற்றும் Firefly விமானங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான பிரத்யேக கட்டணச் சலுகைகளும் இங்கு வழங்கப்படவுள்ளன.
இதில் Bangkok, Singapore, Jakarta, Bali, Hanoi போன்ற பிரபலமான ஆசிய நகரங்களுடன், London, Melbourne, Sydney, Tokyo மற்றும் Auckland போன்ற நீண்டதூர பயண destinations-களும் இடம்பெறுகின்றன.
சிறப்பு பரிசுகள் மற்றும் போட்டிகள்
MATTA Fair-ல் விமானப் பயணத்தை முன்பதிவு செய்யும் பார்வையாளர்களுக்கு பிரத்யேக merchandise பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும், குறைந்தபட்சம் RM100 செலவு செய்யும் வாங்குபவர்கள் Buyers’ Contest-ல் கலந்து கொண்டு, Malaysia Airlines மூலம் Paris மற்றும் Tokyo போன்ற உலகின் முன்னணி நகரங்களுக்கு Business Class return tickets வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.
இதனுடன் Manchester United அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களுடனான meet-and-greet நிகழ்ச்சிகளும், சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு நட்சத்திரங்களுடனான சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
Flight + Hotel முதல் Enrich சலுகைகள் வரை
MAG-ன் பயண சேவைத் தொகுப்பில், MHholidays மூலம் Flight + Hotel packages, Journify மூலம் lifestyle மற்றும் travel offers, seat selection மற்றும் prepaid baggage போன்ற கூடுதல் சேமிப்பு வசதிகளும் இடம்பெறுகின்றன.
Enrich Priority Sale செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் Enrich உறுப்பினர்கள் promotional fares-க்கு முன்கூட்டியே அணுகலைப் பெற முடியும்.
2,054 அரங்குகள் – 306 நிறுவனங்கள்
இந்த ஆண்டு MATTA Fair-ல் 306 நிறுவனங்கள் பங்கேற்று 2,054 அரங்குகளை அமைக்கவுள்ளன.
மேலும், இலவச shuttle சேவையைப் பயன்படுத்தி MATTA Fair-க்கு வரும் பார்வையாளர்கள் தங்களது பயணத்தை பதிவு செய்து Ride & Reels Contest-ல் பங்கேற்கலாம். இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
அதேபோல், Hall 5, Level 2 (International Hall) பகுதியில் கொள்முதல் செய்யும் பார்வையாளர்கள் Spin & Winநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரத்யேக பயணப் பொருட்களை வெல்லலாம்.
கண்காட்சியின் மூன்று நாட்களிலும் surprise local artists வழங்கும் மேடை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதால், MATTA Fair மேலும் உற்சாகமான சூழலை உருவாக்கும்.
இலவச அனுமதி – காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
MATTA Fair-க்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
பார்வையாளர்களின் வசதிக்காக KL Sentral மற்றும் Sunway Putra Mall முதல் MITEC வரை இலவச shuttle சேவையும் வழங்கப்படுகிறது.
வாகனங்களில் வருபவர்களுக்கு MITEC South Entrance basement, MITI basement, MATRADE open parking, Kuala Lumpur Court Complex open parking, The MET basement மற்றும் Hyatt Regency basement ஆகிய இடங்களில் parking வசதிகள் உள்ளன.
செப்டம்பர் 2026 MATTA Fair, பயணிகளுக்கு சிறப்பு விமானக் கட்டணங்கள், விடுமுறைத் திட்டங்கள், பரிசுகள் மற்றும் பல்வேறு பயண அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்கும் முக்கியமான நிகழ்வாக அமையவுள்ளது.
மேலும் தகவல்களுக்கு MATTA Fair அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் @mattafair.official சமூக ஊடகப் பக்கங்களை பின்தொடரலாம்


