
மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (MATTA) மற்றும் RHB Bank இணைந்து, எதிர்வரும் National MATTA Fair 2026 கண்காட்சியில் பயணிகளுக்கு சிறப்பான சலுகைகள் மற்றும் நிதி வசதிகளை வழங்கவுள்ளது.
59ஆவது முறையாக நடைபெறும் MATTA Fair, செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை கோலாலம்பூர் MITEC-இல் நடைபெறுகிறது. இம்முறை 10 அரங்குகளில், மொத்தம் 40,820 சதுர மீட்டர் பரப்பளவில் 2,054 அரங்குகள் இடம்பெறுகின்றன. இதில் 306 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மலேசியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பயணக் கண்காட்சியான MATTA Fair-உடன் RHB Bank இணைந்துள்ளதன் மூலம், பயணத் திட்டமிடும் பொதுமக்களுக்கு பிரத்யேக சலுகைகள், நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் மற்றும் பல்வேறு பயண நன்மைகள் வழங்கப்படவுள்ளன.
RHB Bank Berhad நிறுவனத்தின் Group Community Banking நிர்வாக இயக்குநர் Jeffrey Ng Eow Oo கூறுகையில், பயண மற்றும் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார்.

RHB Multi Currency Debit Card/-i மூலம் ஒரே அட்டையில் 34 நாணயங்களை பயன்படுத்த முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு நாணய இருப்பிலிருந்து நேரடியாகச் செலவிடுவதன் மூலம் conversion fee இல்லாமல் வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். தகுதியான வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு Reward Points-களும் கிடைக்கும்.
MATTA Fair நடைபெறும் காலத்தில், RHB Cards/-i மூலம் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் RM1,500 வரை சேமிப்பைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. Corporate Information Travel, Golden Destinations மற்றும் MITRA Tours & Travel உள்ளிட்ட பங்கேற்கும் பயண நிறுவனங்களில் இந்த சலுகைகள் கிடைக்கும்.
மேலும், பார்வையாளர்களுக்கு RM1 விமான டிக்கெட்டுகளை வாங்கும் வாய்ப்பு, Insta360 கேமராக்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
RHB Bank, பெரிய அளவிலான கொள்முதல்களுக்கு 0% வட்டி வரையிலான தவணைத் திட்டங்களையும்வழங்குகிறது. இதன் மூலம் பயணச் செலவுகளை மாதாந்திர தவணைகளாகப் பிரித்து செலுத்த முடியும்.
MATTA தலைவர் Nigel Wong கூறுகையில், MATTA Fair என்பது பயணிகளின் பயணக் கனவுகளை நனவாக்கும் முக்கிய தளமாக விளங்குவதாகவும், RHB Bank-ன் தொடர்ச்சியான ஆதரவு பயணிகள், உறுப்பினர்கள் மற்றும் கண்காட்சி நிறுவனங்களுக்கு மேலும் சிறப்பான அனுபவத்தை உருவாக்க உதவுவதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியில் 176 சுற்றுலா மற்றும் பயண முகவர்கள், 16 தேசிய சுற்றுலா அமைப்புகள், 13 மாநில சுற்றுலா அமைப்புகள், 59 ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள், 9 தீம் பார்க்கள் மற்றும் 32 பயணத் தொடர்புடைய சேவை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பொதுமக்களுக்கு இலவச அனுமதி
MATTA Fair-க்கு அனுமதி இலவசம். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
KL Sentral மற்றும் Sunway Putra Mall ஆகிய இடங்களிலிருந்து MITEC-க்கு இலவச shuttle bus சேவையும் வழங்கப்படுகிறது.
கார் மூலம் வருபவர்களுக்கு MITEC South Entrance basement, MITI basement, MATRADE open parking, KL Courts complex open parking மற்றும் Hyatt Regency basement parking உள்ளிட்ட இடங்களில் வாகன நிறுத்தும் வசதிகள் உள்ளன.
மேலும் தகவல்களுக்கு MATTA Fair அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடலாம்.


