
பெட்டாலிங் ஜெயா: தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில், Astro நிறுவனம் ‘Ondrinaindhu Kondaduvom’ (ஒன்றிணைந்து கொண்டாடுவோம்) என்ற கருப்பொருளில் தீபாவளி திறந்த இல்ல நிகழ்வு 2026-ஐ வெகுவிமரிசையாக நடத்தியது.

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Jasmine Signature Ballroom மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், உற்சாகமூட்டும் நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

தீபாவளியின் பாரம்பரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தக் கொண்டாட்டம், விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது.

மேலும், Astro நிறுவனத்தின் வரவிருக்கும் தீபாவளி 2026 சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த முன்னோட்டமும்விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பப்படவுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களையும் அவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஒற்றுமை, கலாசாரப் பன்முகத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சியையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதன் சிறப்பையும் எடுத்துரைத்தது.

“ஒன்றிணைந்து கொண்டாடுவோம்” என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, பல்வேறு கலாசார அம்சங்களுடன் நடைபெற்ற Astro-வின் தீபாவளி திறந்த இல்ல நிகழ்வு 2026, பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.


