Friday, October 23, 2026
spot_img
HomeBusinessதிபெத்தில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 16 பேர் பலி, 32 பேர் காயம்

திபெத்தில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 16 பேர் பலி, 32 பேர் காயம்

திபெத்: திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

திபெத்தின் உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில், நாக்சு நகரத்தின் பாக்கன் கவுண்டி பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாக்சு நகர அவசரகால மேலாண்மைப் பணியகத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி சின்ஹுவா வெளியிட்ட செய்தியின்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை 2.25 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஏனைய 21 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

RELATED ARTICLES

Most Popular