Friday, April 17, 2026
Homeஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை ஆஸ்ட்ரோவில் 3 நாள் பிரத்தியேக நேரலை ஒளிபரப்புடன் தைப்பூச கொண்டாட்டம்

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை ஆஸ்ட்ரோவில் 3 நாள் பிரத்தியேக நேரலை ஒளிபரப்புடன் தைப்பூச கொண்டாட்டம்

ஜனவரி 30 இரவு 9 மணி முதல் பிப்ரவரி 1 இரவு 11.59 மணி வரைப் பத்துமலை, ஈப்போ, ஜார்ஜ்டவுன் மற்றும் சுங்கைபட்டாணி ஆகிய இடங்களில்  குறிப்பிடத்தக்க உள்ளூர் கோயில்களின்  காட்சிகள் மற்றும் ரத ஊர்வலங்களின் பிரத்தியேக 3 நாள் சிறப்பு நேரலை ஒளிபரப்புடன் தைப்பூசத்திருநாளை ஆஸ்ட்ரோ கொண்டாடுகிறது – 

ஆஸ்ட்ரோ விண்மீன்(அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கிடைக்கப்பெரும். மேலும், ராகா வானொலியில் 24 மணி நேரப் பக்திப் பாடல்களைக் கேட்பதன் மூலம் மலேசியர்கள் பக்தி உணர்வில் மூழ்கலாம்.

சோதிராஜன் பரஞ்சோதி, மீனா குமாரி கடியன்பன், அருணா ராஜ்தேவராஜு, இந்துமதி சுபர்மணியன், நதியா ஜெயபாலன், மகேந்திரன் வேலுபிள்ளை, சுரேஷ் திருஞான சம்பந்தன், விகடகவி மகேன், ஸ்ரீகுமரன் முனுசாமி, ரேவதி மாரியப்பன், குணசீலன் சிவக்குமார், கபில் கணேசன், சிவராஜ் லிங்கராஜ், மற்றும் சாந்தினி சுப்ரமணியம் ஆகிய புகழ்பெற்ற மற்றும் புதுமுகத் தொகுப்பாளர்களை நன்றி கந்தா எனும் கருப்பொருளைத் தாங்கி மலரும் இந்த நேரலை ஒளிபரப்புசித்தறிக்கிறது. 3 நாள் ஒளிபரப்பு முழுவதும் அரங்கத்தில் விவாதங்கள், நேரலைத் தகவல்கள், பக்தர்களுடனான நேர்காணல்கள் மற்றும் முக்கியக் கோயில்களிலிருந்து நேரலைப்  மூலம் தைப்பூச அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஒன்றாக அவர்கள் வழங்குவர்.

பின்வரும் புகழ்பெற்ற உள்ளூர் கோயில்களிலிருந்துப் பிரத்தியேகக்காட்சிகள்,  பூஜைகள் மற்றும்  ரத ஊர்வலங்கள்ஆகியவற்றை கொண்ட சிறப்புத் தைப்பூச நேரலை ஒளிபரப்பை அனைத்து மலேசியர்களும் கண்டு மகிழலாம்:

• பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம் (கோம்பாக், சிலாங்கூர்)

• ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (கோம்பாக், சிலாங்கூர்)

• கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் (ஈப்போ, பேராக்)

• அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)

• நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)

• ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆலயம் (சுங்கை பெட்டானி, கெடா)

எளிதான ஸ்ட்ரீமிங் மற்றும் முடிவற்றப் பொழுதுபோக்கை வழங்கும், இப்போது ரிம49.99* இலிருந்துக் கிடைக்கும் அதிக மதிப்புடையஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகளை அனுபவிக்கவாடிக்கையாளர்களை ஆஸ்ட்ரோ அழைக்கிறது. ஆஸ்ட்ரோ ஒன்சந்தாதாரராக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் astro.com.myஅணுகலாம் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்திஅனுப்பலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தைவலம் வாருங்கள்.

*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும்நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

RELATED ARTICLES

Most Popular