Friday, April 17, 2026
HomeBusinessஅனுபவமும் புதுமையும் ஒன்றாகும் ஒரு பயணம் - Styling Spaces

அனுபவமும் புதுமையும் ஒன்றாகும் ஒரு பயணம் – Styling Spaces

Styling Spaces என்பது வெறும் இன்டீரியர் பிராண்ட் அல்ல அது ஒரு வாழ்க்கை தத்துவம். இந்த பிராண்டின் பின்னால் இருக்கும் தாய்–மகள் கூட்டணியான பானு குணபாலன் மற்றும் ஸ்ரேயா டெபோரா ஆகியோருடன் ஒரு சிறப்பு உரையாடல்.

கேள்வி: Styling Spaces உருவாக காரணமாக இருந்த அந்த முதல் எண்ணம் என்ன?

பானு குணபாலன்:நான் 23 ஆண்டுகளாக இன்டீரியர் டெகொரேஷன் துறையில் பணியாற்றி வருகிறேன். பல இடங்களை வடிவமைத்தாலும், “ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் சொந்த அடையாளம் இருக்க வேண்டும்” என்ற எண்ணம் எப்போதும் என்னுடன் இருந்தது. அந்த எண்ணமே Styling Spaces-ன் உருவதற்கான காரணம்.

ஸ்ரேயா டெபோரா:அம்மாவின் அனுபவத்தையும், இன்றைய நவீன வாழ்க்கை முறையையும் இணைக்க வேண்டும் என்று நினைத்தோம். அங்கிருந்துதான் Styling Spaces ஒரு பிராண்டாக உருவானது.

கேள்வி: தாய்மகள் கூட்டணியாக வேலை செய்வது எவ்வளவு சவாலானது?

ஸ்ரேயா டெபோரா:சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது எங்களை வலுப்படுத்துகிறது. அம்மா அனுபவத்துடன் முடிவெடுப்பார்; நான் புதுமையையும் டிரெண்ட்களையும் கொண்டு வருவேன். இந்த சமநிலைதான் Styling Spaces-ன் பலம்.

பானு குணபாலன்:நம்பிக்கையும் புரிதலும் இருந்தால், எந்த உறவும் வலிமையான தொழில்முனைவு கூட்டணியாக மாற முடியும்.

கேள்வி: Styling Spaces-ன் அடையாளம் என்ன?

பானு குணபாலன்:அழகு மட்டும் போதாது. ஒரு இடம் வசதியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.நாங்கள் வடிவமைக்கும் ஒவ்வொரு இடமும், அங்கு வாழும் மனிதரின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்க வேண்டும்.

ஸ்ரேயா டெபோரா:நுட்பமான ஆடம்பரமே எங்கள் அடையாளம்.

கேள்வி: உங்கள் சேவைகள் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றன?

பானு குணபாலன்:நாங்கள் ரெடிமேட் தீர்வுகளை நம்புவதில்லை.Curtains முதல் Upholstery, Wallpapers, Floorings வரை அனைத்தும் bespoke, அதாவது வாடிக்கையாளருக்கே உரியது.

ஸ்ரேயா டெபோரா:மேலும், showroom-க்கு வர முடியாதவர்களுக்கு at-your-doorstep personalized service வழங்குகிறோம். இது வாடிக்கையாளர்களிடம் பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

கேள்வி:தூதரகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பணியாற்றும் அனுபவம் எப்படி?

பானு குணபாலன்:அது மிகப்பெரிய பொறுப்பு.ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான தேவைகள் இருக்கும் மருத்துவமனைகளில் செயல்திறன், தூதரகங்களில் கண்ணியம்,வீடுகளில் உணர்வுகள். அனைத்தையும் சமநிலைப்படுத்துவதே உண்மையான சவால்.

கேள்வி: இன்றைய இளம் தலைமுறைக்கு Styling Spaces சொல்ல விரும்பும் செய்தி என்ன?

ஸ்ரேயா டெபோரா:டிரெண்ட்களை பின்பற்றுவது தவறு இல்லை.ஆனால், உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற டிசைனை தேர்ந்தெடுப்பதே முக்கியம்.

பானு குணபாலன்:பொறுமையும் நேர்த்தியும் இருந்தால், தரம் தானாக பேசும்.

கேள்வி: Styling Spaces-ன் எதிர்கால திட்டங்கள்?

ஸ்ரேயா டெபோரா:அனைத்துலக சந்தையை நோக்கி விரிவடைய வேண்டும் என்பது எங்கள் கனவு.

பானு குணபாலன்:எந்த அளவுக்கு வளர்ந்தாலும், தனிப்பட்ட கவனம் மற்றும் தரத்தை ஒருபோதும் இழக்க மாட்டோம்.

கேள்வி: இறுதியாக, Styling Spaces என்பதை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்?

பானு குணபாலன் & ஸ்ரேயா டெபோரா (சிரித்தபடி):“நாங்கள் இடங்களை அலங்கரிப்பதில்லை… வாழ்க்கை அனுபவங்களை வடிவமைக்கிறோம்.”

Styling Spaces

📍 Bangsar Shopping Centre, Kuala Lumpur

📞 Banu: +60 16-202 3498

📞 Sreya: +60 17-606 7907

RELATED ARTICLES

Most Popular