Friday, June 12, 2026
HomeBusinessVM2026-ஐ முன்னிட்டு சிறப்பு வாகன பதிவு எண்கள் அறிமுகம்

VM2026-ஐ முன்னிட்டு சிறப்பு வாகன பதிவு எண்கள் அறிமுகம்

மலேசியா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (MOTAC) மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) இணைந்து, Visit Malaysia 2026 (VM2026) பிரச்சாரத்தை முன்னிட்டு ‘V 1 MY’ முதல் ‘V 9999 MY’ வரை சிறப்பு வாகன பதிவு எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு பதிவு எண்களுக்கான இணைய ஏலம் 13 ஜூன் 2026 முதல் 17 ஜூன் 2026 வரை JPJ-யின் JPJeBidதளத்தில் நடைபெறும்.

MOTAC அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கூறுகையில், இந்த முயற்சி அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து VM2026-ஐ வெற்றிகரமாக முன்னெடுக்க உதவும் என்றார். மேலும், மலேசியாவின் சுற்றுலா துறையை உலக அளவில் பிரபலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவும் இது அமையும் என தெரிவித்தார்.

ஏலத்திற்கான குறைந்தபட்ச விலைகள் பின்வருமாறு:

🔹 Golden (சிறப்பு எண்கள்) – RM20,000
🔹 Premium (பிரீமியம் எண்கள்) – RM5,000
🔹 Attractive (கவர்ச்சிகரமான எண்கள்) – RM2,500
🔹 Popular (பிரபலமான எண்கள்) – RM500
🔹 Running (சாதாரண எண்கள்) – RM300

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் விருப்பமான பதிவு எண்களைப் பெறுவதுடன், Visit Malaysia 2026பிரச்சாரத்திற்கும் தங்களின் ஆதரவை வழங்க முடியும்.

VM2026-ஐ உலக அளவில் பிரபலப்படுத்தும் முயற்சியில் இந்த சிறப்பு பதிவு எண் திட்டம் முக்கிய பங்காற்றும் என MOTAC மற்றும் JPJ நம்பிக்கை தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

Most Popular