Thursday, September 10, 2026
spot_img
HomeBusinessAstro X3 அறிமுகம்: பெட்டி எப்போது வேண்டுமானாலும் Astro பார்க்க புதிய வசதி

Astro X3 அறிமுகம்: பெட்டி எப்போது வேண்டுமானாலும் Astro பார்க்க புதிய வசதி

மலேசியாவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான Astro, தனது புதிய Astro X3 சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் இனி Set-Top Box தேவையில்லை, தொழில்நுட்ப நிறுவலும் தேவையில்லை. மேலும், வாடிக்கையாளர்கள் மொபைல் வழியாக சில நிமிடங்களிலேயே பதிவு செய்து உடனடியாக Astro நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை விளையாட்டுப் போட்டிகளை ஸ்ட்ரீமிங் மூலம் பார்க்க முடியும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களின் பார்வை பழக்கவழக்கங்கள் மாறிவரும் நிலையில், Astro X3 சேவை ஸ்மார்ட் டிவிகளில் நேரடியாக Astro App மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் சாதனங்கள் இல்லாமலேயே பயனர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.

இதனுடன் Astro GO வசதியும் இணைக்கப்பட்டுள்ளதால், மொபைல், டேப்லெட் மற்றும் பிற சாதனங்களிலும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் உள்ளடக்கங்களை பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

Astro X3 மூலம் Astro Originals தொடர்கள், Signature Live நிகழ்ச்சிகள், Premier LeagueAFC Champions LeagueUEFA Champions LeagueFormula 1MotoGPWimbledon, சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் உள்ளிட்ட உலகத் தரமான விளையாட்டு நிகழ்ச்சிகளையும், பல்வேறு சர்வதேச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒரே தளத்தில் எளிதாக அனுபவிக்க முடியும்.

புதிய மற்றும் தற்போதைய Astro வாடிக்கையாளர்கள் இருவரும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

வரும் 20 ஜூலை 2026 முதல், விளையாட்டு சேனல்களுடன் அல்லது இல்லாமல் என இரண்டு 12 மாத ஒப்பந்தத் திட்டங்களில் Astro X3 அறிமுகமாகிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, 2026 டிசம்பர் முதல் ஒப்பந்தம் இல்லாத (No Contract) திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் விருப்பப்படி சேவையை தொடங்கவும், இடைநிறுத்தவும் அல்லது ரத்து செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular