Thursday, October 8, 2026
spot_img
HomeBusinessடிஜிட்டல் புகைப்படங்கள் மூலம் மலேசியாவின் அழகை உலகிற்கு கொண்டு செல்லும் Tourism Malaysia – OPPO...

டிஜிட்டல் புகைப்படங்கள் மூலம் மலேசியாவின் அழகை உலகிற்கு கொண்டு செல்லும் Tourism Malaysia – OPPO Malaysia கூட்டணி

மலேசியாவின் சுற்றுலா அழகையும் தனித்துவமான அனுபவங்களையும் டிஜிட்டல் புகைப்படங்கள் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் Tourism Malaysia மற்றும் OPPO Malaysia இணைந்து புதிய ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoC) கோலாலம்பூர் Hilton ஹோட்டலில் கையெழுத்தானது. Tourism Malaysia துணை தலைமை இயக்குநர் (Promotions) Mohd Akbal Setia மற்றும் OPPO Malaysia சந்தைப்படுத்தல் இயக்குநர் Monica Qin ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

OPPO-வின் நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் புகைப்படக் கலை மூலம் மலேசியாவின் சுற்றுலாத் தலங்கள், கலாசாரம், உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பிரபலப்படுத்த இந்தக் கூட்டணி செயல்படும்.

குறிப்பாக கிளந்தான் மாநிலத்தின் பாரம்பரியம், கலை, கலாசாரம் மற்றும் நாசி கெராபு உள்ளிட்ட உள்ளூர் உணவுகளும் உலகளவில் கவனம் பெறும் வகையில் டிஜிட்டல் காட்சிப்படுத்தல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மலேசியாவிற்கு 28.8 மில்லியன் சர்வதேச வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டு வரையிலான சுற்றுலா வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த இந்தக் கூட்டணி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular