Thursday, October 22, 2026
spot_img
HomeBusiness20 இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை; பாசிர் கூடாங் முதலிடம்!

20 இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை; பாசிர் கூடாங் முதலிடம்!

மலேசியாவில் இன்று (அக். 13) நண்பகல் 12 மணி நிலவரப்படி, கூட்டரசுப் பிரதேசமான புத்ராஜெயா உட்பட 20 இடங்களில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளது.

மலேசிய சுற்றுச்சூழல் துறையின் (JAS) காற்றுத் தரக் குறியீட்டு மேலாண்மை அமைப்பான APIMS இணையதளத்தின் அண்மைய தகவலின்படி, ஜோகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங் பகுதியில் அதிகபட்சமாக 180 என்ற IPU அளவு பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து லார்கின் (175), கோத்தா திங்கி (168), சரவாக்கின் ஸ்ரீ அமான் (167), பெங்கெராங் (166), மலாக்கா நகரம் (161), பத்து பஹாட் (161), பகாங்கின் பாலோக் பாரு (161), புக்கிட் ரம்பாய் (160), ரொம்பின் (158) ஆகிய இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது.

மேலும், சபாவின் தாவாவ் (155), செரியான் மாவட்டக் காவல் தலைமையகம் (155), நெகிரி செம்பிலானின் செரம்பான் (154), நிலாய் (153), குளுவாங் (153), தங்காக் (152), அலோர் காஜா (151), புத்ராஜெயா (138), செகாமாட் (134) மற்றும் திரங்கானுவின் கெமாமான் (107) ஆகிய இடங்களிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வதுடன், காற்றுத் தரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

Most Popular