Thursday, October 22, 2026
spot_img
HomeBusinessசுபாங் விமான நிலையத்திலிருந்து தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்த பிலிப்பைன்ஸ் நபர் அடையாளம் காணப்பட்டார்

சுபாங் விமான நிலையத்திலிருந்து தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்த பிலிப்பைன்ஸ் நபர் அடையாளம் காணப்பட்டார்

லாவோஸின் லுவாங் பிரபாங் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், அந்த நபர் முன்னாள் விமானி என்றும், பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் குற்றப் பதிவு கொண்டவர் என்றும் தெரிவித்தார்.

விமான வாடகையை ஏற்பாடு செய்த மலேசிய தரகர் உள்ளிட்ட பல சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்ததாக அவர் கூறினார்.

மேலும், இந்தக் கடத்தல் கும்பலில் 51 வயதுடைய பிலிப்பைன்ஸ் பெண் ஒருவரும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular