
தாய்லாந்தைச் சேர்ந்த Dusit International நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவான Dusit Hotels and Resorts, தனது ASAI Hotels வாழ்க்கைமுறை ஹோட்டல் வர்த்தகக் குறியீட்டை மலேசியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதன் முதல் ஹோட்டலான ASAI Gamuda Cove, 2026 செப்டம்பர் 15ஆம் தேதி திருப்புவிழா கண்டது.

13 மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தம் 280 அறைகள் உள்ளன. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து காரில் சுமார் 20 நிமிடப் பயணத் தொலைவில் அமைந்துள்ள இது, 1,530 ஏக்கர் பரப்பளவிலான Gamuda Cove நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இயற்கைச் சூழலுடன் இணைந்த சுற்றுலா அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு அருகில் 1,111 ஏக்கர் பரப்பளவிலான Paya Indah Discovery Wetlands இயற்கைச் சரணாலயம், 90 ஏக்கர் Wetlands Arboretum மற்றும் 39 நீர்ச் சறுக்கு விளையாட்டுகளைக் கொண்ட SplashMania Waterpark ஆகியவை உள்ளன. குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு மையமான Discovery Park-ம் அருகிலேயே அமைந்துள்ளது.

தனியாகப் பயணிப்பவர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு பேர் வரை தங்கக்கூடிய குடும்ப அறைகளும் இதில் அடங்கும். மேலும், ஈர்ப்புக் குளம், உடற்பயிற்சிக் கூடம், இணைந்து பணியாற்றும் இடங்கள் மற்றும் 100 பேர் வரை பங்கேற்கக்கூடிய கூட்டம், நிகழ்ச்சி நடத்தும் வசதிகளும் உள்ளன.

உணவு வசதிகளைப் பொறுத்தவரை, மலேசிய மற்றும் தாய்லாந்து உணவு வகைகளுடன் மேற்கத்திய உணவுகளையும் வழங்கும் Nasi & Khao உணவகம், தேநீர் மற்றும் சிற்றுண்டிகளுக்கான Tea Shop, நீச்சல் குளத்தை ஒட்டிய Pool Bar ஆகிய மூன்று உணவு மற்றும் பான விற்பனை மையங்கள் செயல்படவுள்ளன.

இதற்கிடையில், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் ஃபார்முலா ஒன் பந்தயம் மீண்டும் நடைபெறவுள்ளதாகவும், அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ஹோட்டல் வசதியான தங்குமிடமாக அமையும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ASAI Gamuda Cove, தாய்லாந்து மற்றும் ஜப்பானில் ஏற்கெனவே செயல்படும் ASAI ஹோட்டல்களுடன் இணையும் நான்காவது ஹோட்டலாகும். மலேசியாவில் Dusit நிறுவனத்தின் இரண்டாவது ஹோட்டலாகவும் இது அமைகிறது. தொடர்ந்து, 2026 அக்டோபரில் Dusit Princess Ipoh ஹோட்டலையும் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“Live Local” என்ற ASAI Hotels நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப, உள்ளூர் இயற்கைச் சூழல், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சமூகத்துடன் இணைந்த அனுபவங்களை விருந்தினர்களுக்கு வழங்குவதே இந்த ஹோட்டலின் முக்கிய நோக்கமாகும்.


