
உணவு, ஷாப்பிங் மற்றும் கலாசாரச் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற தைவானின் தைப்பே நகரம், தற்போது குடும்பங்களின் ஆரோக்கியப் பராமரிப்புக்கும் புதிய வாய்ப்பை வழங்குகிறது.

2025ஆம் ஆண்டில் 385,787 மலேசியர்கள் தைவானுக்குச் சென்றுள்ள நிலையில், தைப்பேயின் பீட்டோ (Beitou) பகுதியில் அமைந்துள்ள Taipei Beitou Health Management Hospital மற்றும் Hotel Royal Beitou இணைந்து, மருத்துவ ஆலோசனையுடன் கூடிய தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளையும் விடுமுறை அனுபவத்தையும் ஒருங்கிணைத்துள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபரின் வயது, குடும்ப மருத்துவப் பின்னணி மற்றும் உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவர் ஆலோசனை மற்றும் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
மேலும், பீட்டோவின் வெந்நீர் ஊற்றுகள், இயற்கைச் சுற்றுலாத் தலங்கள், உள்ளூர் உணவுகள் மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு அம்சங்களையும் பயணிகள் அனுபவிக்க முடியும். முஸ்லிம் பயணிகளுக்கு ஏற்ற தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் Hotel Royal Beitou-வில் உள்ளன.
மலேசியக் குடும்பங்கள் வழக்கமான சுற்றுலா அனுபவத்துடன், தங்களது ஆரோக்கியத்தைப் புரிந்துகொண்டு பராமரிப்பதற்கும் இந்த முயற்சி ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.
வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வோர், பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மலேசியா திரும்பிய பிறகு மேற்கொள்ள வேண்டிய தொடர் சிகிச்சைகள் குறித்து முன்கூட்டியே தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்.


