Tuesday, October 27, 2026
spot_img
HomeBusinessபிரிக்பீல்ட்ஸில் தேசிய தீபாவளி விழா: 10,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!

பிரிக்பீல்ட்ஸில் தேசிய தீபாவளி விழா: 10,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!

நவம்பர் 14-ல் பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடங்கி வைக்கிறார்; நாள் முழுவதும் கலை, கலாசார நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய தீபாவளிக் கொண்டாட்டம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. தேசிய ஒற்றுமை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார். காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், மலேசியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் ‘ருமா மலேசியா’ (Rumah Malaysia) எனும் சிறப்புக் கண்காட்சியும் பார்வையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழா சனிக்கிழமையில் நடைபெறுவதால், அதிகளவிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக தேசிய ஒற்றுமை அமைச்சின் பிரதிநிதி யுனேஸ்வரன், ஊடகவியலாளர்களுடனான தேநீர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

ஒற்றுமையை வலுப்படுத்த ஊடகங்களுக்கும் அழைப்பு

இதற்கிடையில், இன, மத மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்களைத் தவிர்த்து, நாட்டின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும் மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

தேசிய தீபாவளிக் கொண்டாட்டம், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, மலேசியாவின் பன்முகக் கலாசாரத்தையும் பரஸ்பர மரியாதையையும் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular