Monday, November 23, 2026
spot_img
HomeBusinessபப்ளிக் கோல்ட் நிறுவனத்தின் 35 தொழில்முனைவோருக்கு RM2.5 மில்லியன் பரிசு!

பப்ளிக் கோல்ட் நிறுவனத்தின் 35 தொழில்முனைவோருக்கு RM2.5 மில்லியன் பரிசு!

பப்ளிக் கோல்ட் குழுமத்தின் (Public Gold Group) 35 தொழில்முனைவோரின் வர்த்தகச் சாதனை, தலைமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பைப் பாராட்டும் வகையில் மொத்தம் RM2.5 மில்லியன் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற Diamond Recognition Ceremony FY2025/26 நிகழ்ச்சியில், எட்டு விருது பிரிவுகளின் கீழ் இந்த அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ லூயிஸ் என்ஜி (Datuk Seri Louis Ng), விருது பெற்றவர்களின் சாதனைகள் அவர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தொழில்முனைவு உணர்வைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

5-Star Diamond விருது மூன்று தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. முகமட் ஷரிபுதீன் முகமட் ஜமீல் – ஷியாமிமி நூர் அகிலா அவாலுடின், முகமட் அஸாம் அமிரி முகமட் ரஃபி – ரஸியாத்துல் மாடியா ஒஸ்மான் மற்றும் டாக்டர் முகமட் ஷஃபிக் ரோஸ்லான் – டாக்டர் சுஹைலா ஸஹாருடின் ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர்.

ஒவ்வொரு தம்பதிக்கும் தலைமைத்துவ போனஸ், பங்களா வீட்டு நிதி மற்றும் சொகுசு கார் நிதி உள்ளிட்ட மொத்தம் RM604,000 மதிப்பிலான பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், 5-Star Emerald விருது வான் முகமட் வாசிர் வான் அப்துல் வஹாப் – நூர்ஷிஹாஜியா ஜூசோஹ் தம்பதிக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு RM86,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

5-Star Sapphire விருதை மஸ்லிஃபா ஒமார் பெற்றார். அதேவேளை, முகமட் அஸிம் அலீஃப் முகமட் ஜூகி – சித்தி நூர் சவ்தா ஷம்சுல் ஆகியோர் 4-Star Sapphire விருதைப் பெற்றனர். Sapphire பிரிவில் விருது பெற்றவர்களுக்கு RM21,000 தலைமைத்துவ போனஸ் வழங்கப்பட்டது.

மேலும், 4-Star Ruby பிரிவில் மூன்று தம்பதிகள் அங்கீகரிக்கப்பட்டு, ஒவ்வொரு தம்பதிக்கும் RM9,000 தலைமைத்துவ போனஸ் வழங்கப்பட்டது. 3-Star Jade, 4-Star Pearl மற்றும் 3-Star Pearl பிரிவுகளிலும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

2008ஆம் ஆண்டு பினாங்கில் தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்ட், தற்போது மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய இராச்சியம், ஹொங்கொங் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு மொத்தம் 36 கிளைகள் உள்ளன.

நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RM29.5 பில்லியன் மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளதுடன், 98 டன் தங்க விற்பனையையும் 62 டன் தங்க மறுவாங்குதலையும் மேற்கொண்டுள்ளது. மேலும், உலகளவில் 2.7 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

அத்துடன், 155 யூனிட் தங்க ஏடிஎம் இயந்திரங்களை நிறுவியதற்காக Guinness World Records அங்கீகாரத்தையும் பெற்றுள்ள பப்ளிக் கோல்ட், தற்போது தனது தங்க ஏடிஎம் வலையமைப்பை 183 இயந்திரங்களாக விரிவுபடுத்தியுள்ளது.

இதுவரை தனது தொழில்முனைவோருக்கு மொத்தம் RM530 மில்லியன் ஊக்கத்தொகைகளை நிறுவனம் வழங்கியுள்ளதாக டத்தோ ஸ்ரீ லூயிஸ் என்ஜி தெரிவித்தார்.

மேலும், சர்வதேச அளவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, மூலோபாயக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, விலைமதிப்புள்ள உலோகத் துறையில் புதுமைகளை மேம்படுத்தவும் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

Most Popular