
தென்னிந்திய கலாச்சாரத்தின் செழுமையையும், நவீன வாழ்க்கை முறையையும் ஒரே மேடையில் கொண்டாடும் நோக்கில், மீடியாபெர்க் கான்செர்ட்ஸ் & ஷோஸ் (Mediaberg Productions) தனது புதிய பிரீமியம் கலாச்சார விழாவான ‘மேட் ஆஃப் மெட்ராஸ்’ (Made of Madras) 2026-க்கான முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கலை, இசை, கலாச்சாரம், உணவு, ஆடை அலங்காரம், தொழில்முனைவோர் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் இந்த விழா, மலேசியாவில் வாழும் இந்தியர்களையும், கலாச்சார ஆர்வலர்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் தனித்துவமான நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ராஸின் பாரம்பரிய பெருமையையும், அதன் சமகால அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விழாவில், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்வுகள், உணவுத் திருவிழா, ஃபேஷன் காட்சிகள், தொழில்முனைவோர் கண்காட்சி, கைவினைப் பொருட்கள், குடும்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் இடம்பெற்றுள்ள “Something Epic Is Coming – Stay Tuned” என்ற வாசகம், இந்த விழா மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தாண்டி, உள்ளூர் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், உணவகங்கள் மற்றும் படைப்பாற்றல் துறையினருக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் முக்கிய தளமாகவும் இந்த விழா அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விழா நடைபெறும் தேதி, இடம், கலைஞர்கள் பட்டியல், கண்காட்சியாளர்கள், டிக்கெட் விவரங்கள் மற்றும் முழுமையான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மேட் ஆஃப் மெட்ராஸ் 2026’, மலேசியாவில் மெட்ராஸ் கலாச்சாரத்தின் தனித்துவமான அடையாளத்தையும், அதன் பாரம்பரிய மரபுகளையும், நவீன படைப்பாற்றலையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய விழாவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மெட்ராஸின் துடிப்பையும், பாரம்பரியத்தின் பெருமையையும் மலேசியாவில் ஒன்றாகக் கொண்டாடுவோம்” என்ற நோக்கத்துடன், இந்த விழாவை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

