Saturday, July 4, 2026
HomeReviewsஇரும்புத் தோட்டம்' டிரெய்லர் வெளியீடு! – உண்மையைத் தேடும் பரபரப்பான பயணம் விரைவில் திரையரங்குகளில்! 

இரும்புத் தோட்டம்’ டிரெய்லர் வெளியீடு! – உண்மையைத் தேடும் பரபரப்பான பயணம் விரைவில் திரையரங்குகளில்! 

மலேசிய தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த ‘இரும்புத் தோட்டம்’ (Irumbu Thottam) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெய்தேவ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கிரைம்-த்ரில்லர் திரைப்படம், மர்மம், குற்றம், சஸ்பென்ஸ் மற்றும் உண்மையைத் தேடும் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும், பின்னணி இசையும், அதிரடி தருணங்களும் ரசிகர்களை கடைசி வரை திரையில் கட்டிப்போடும் என்பதற்கான வலுவான அறிகுறியை வழங்குகின்றன.

“உண்மையைத் தேடுவது எளிதல்ல… ஆனால் உண்மை வெளிவரும் போது அனைத்தும் மாறிவிடும்.” என்ற உணர்வை டிரெய்லர் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது.

AVLT Production தயாரிப்பில், FINAS ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இர்ஃபான் சைனிலோகவர்மன்மேரி தஷானி மேத்யூஸ்மோகனா ராஜ்துர்காஷினி எஸ். விஜயன்வினோஷன்விஜய் நாயுடுவி. கோகிலாபாலன் காஷ்கலைமாமணி கே.எஸ். மணியம்டத்தோ கீதாஞ்சலி ஜிஅட்லி ஹபிஸ்ஆதித் தேவ்தியாகராஜன் ராமசாமிதிவ்யா வேகன் ஜான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இவர்களுடன் ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் குமார் (TK) மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன் வழங்கியுள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் வலிமையைக் கொடுத்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சியமைப்பிலும் படம் தரமான அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை டிரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.

டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், “இது மலேசிய தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படம்”,  என சமூக வலைத்தளங்களில் தங்களது உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

‘இரும்புத் தோட்டம்’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. உண்மை, நீதி, மர்மம் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் விறுவிறுப்பான திரைப்பயணமாக இது அமையவுள்ளது.

இப்போது டிரெய்லரை பார்த்துவிட்டு, பெரிய திரையில் இந்த மர்மப் பயணத்தை அனுபவிக்க தயாராகுங்கள்!

RELATED ARTICLES

Most Popular