
‘A Season To Savour’ சிறப்பு உணவு விருந்து, தங்கும் வசதி; டிசம்பர் 31ஆம் தேதி ‘Wander Into 2027’ புத்தாண்டு கொண்டாட்டம்

புத்ராஜெயா, நவம்பர் 20 – கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, Le Méridien Putrajaya ஹோட்டல் ‘A Season To Savour’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் உணவு விருந்துகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தச் சிறப்புத் திட்டத்தில் விடுமுறைக் கால தங்கும் வசதி, பிற்பகல் தேநீர் விருந்து, கிறிஸ்துமஸ் சிறப்பு உணவுகள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கான பல்வேறு உணவு அனுபவங்கள் இடம்பெறுகின்றன.

Latitude 02 உணவகத்தில் வழங்கப்படும் La Fête Afternoon Tea சிறப்பு தேநீர் விருந்து, இருவருக்கு RM168 நிகர விலையில் டிசம்பர் 30ஆம் தேதி வரை கிடைக்கும்.
Latest Recipe உணவகத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் நடைபெறும் Season of Savours சர்வதேச உணவு விருந்தில், மதிய உணவு ஒருவருக்கு RM158 முதல், இரவு உணவு RM178 முதல் வழங்கப்படுகிறது. டிசம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளுக்கான கிறிஸ்துமஸ் சிறப்பு இரவு உணவு ஒருவருக்கு RM208 ஆகும்.

மேலும், கிறிஸ்துமஸ் விருந்தை வீட்டிலேயே கொண்டாட விரும்புவோருக்காகவும் சிறப்பு உணவுகள் முன்பதிவு அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
- கிறிஸ்துமஸ் வான்கோழி (குறைந்தபட்சம் 6 கிலோ): RM680 முதல்
- Signature Beef Wellington: RM390
- Roast Australian Boneless Leg of Lamb: RM360
இந்த உணவுகளுக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டும்.
அதேவேளை, ஹோட்டல் லாபியில் அமைக்கப்படும் Christmas Goodies Counter மூலம் கிறிஸ்துமஸ் சிறப்பு குக்கீஸ் RM18 முதல் மற்றும் முழுக் கேக்குகள் RM138 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

2027 புத்தாண்டை வரவேற்கும் ‘Wander Into 2027’
இதற்கிடையில், டிசம்பர் 31ஆம் தேதி ‘Wander Into 2027’ என்ற சிறப்பு புத்தாண்டுக் கொண்டாட்டம் Latitude 02 மற்றும் Latest Recipe உணவகங்களில் நடைபெறவுள்ளது.
Latitude 02வில் இசை நிகழ்ச்சி, DJ பொழுதுபோக்கு, பானங்கள் மற்றும் நள்ளிரவு புத்தாண்டு கவுண்ட்டவுன் இடம்பெறவுள்ளன. மேலும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது.

குழுவினருக்கான சிறப்புத் தொகுப்புகள் 8 முதல் 10 பேருக்கு RM788 மற்றும் 20 முதல் 22 பேருக்கு RM2,888 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Latest Recipe உணவகத்தில் புத்தாண்டு இரவு உணவு விருந்து ஒருவருக்கு RM208, குழந்தைகளுக்கு RM104 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு உணவு, நள்ளிரவு உணவு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய தொகுப்பு பெரியவர்களுக்கு RM266, குழந்தைகளுக்கு RM133 ஆகும்.
2027 ஜனவரி 1ஆம் தேதி நடைபெறும் புத்தாண்டு சிறப்பு மதிய உணவு விருந்து பெரியவர்களுக்கு RM198, குழந்தைகளுக்கு RM99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘A Season To Savour’ தங்கும் சிறப்புத் திட்டம் 2027 ஜனவரி 3ஆம் தேதி வரை கிடைக்கும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புவோர் Le Méridien Putrajaya ஹோட்டலின் சிறப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்பதிவு மற்றும் மேலதிக விவரங்களுக்கு:
தொலைபேசி: +6012-823 4101
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மேலதிக தகவல்களைப் பெறலாம்.


