Friday, May 15, 2026
HomeReviewsசூர்யாவின் “கருப்பு” திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது

சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது

சூர்யா  நடித்த மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள கருப்பு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சூர்யாவின் அதிரடி கம்பேக் திரைப்படமாக பார்க்கப்படும் இந்த படம், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது #Karuppu மற்றும் #Suriya என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

மலேசியாவில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டை Heartwork Pictures மற்றும் FST Trading நிறுவனம் வழங்குகின்றன. மேலும் Malaysia Suriya FC மற்றும் DAK Evolution Trading இணைந்து First Day First Show (FDFS) கொண்டாட்டங்களை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளன.

கொண்டாட்டம், ரசிகர் பேரணி என திரையரங்குகள் திருவிழா போல மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular