
Kementerian Pengangkutan Malaysia இளைஞர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தும் புதிய முயற்சியாக, பள்ளி மாணவர்களுக்கான இலவச B2 மோட்டார் சைக்கிள் உரிமம் திட்டத்தை ஜொகூர் பாருவில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சருடன் இணைந்து திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் B40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பள்ளி மாணவர்கள் இலவசமாக B2 மோட்டார் சைக்கிள் உரிமம் பெற உதவி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம், மாணவர்கள் சட்டப்படி மற்றும் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதனை உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரித்து, இளைஞர்களிடையே பொறுப்பான வாகன ஓட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி, மாணவர்களின் தினசரி பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதோடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

