
Fahmi Fadzil அவர்கள் மே 2026 மாதத்திற்கான தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு Perbadanan Kemajuan Filem Nasional Malaysia (FINAS) ஏற்பாட்டில் தகவல் தொடர்பு அமைச்சக வளாகத்தின் அரங்கில் நடைபெற்றது.

தனது உரையில், நாட்டின் படைப்பாற்றல் துறையின் முக்கிய சாதனைகளை அமைச்சர் வலியுறுத்தினார். குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் மலேசிய உள்ளூர் திரைப்படங்கள் RM244 மில்லியன் வசூலை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். இது உள்ளூர் திரைப்பட துறைக்கு மக்களிடையே அதிகரித்து வரும் ஆதரவை வெளிப்படுத்துகிறது என்றார்.

மேலும், நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் “Majlis Ekonomi Jingga” அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது கலை மற்றும் படைப்பாற்றல் துறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, உள்ளூர் அனிமேஷன் துறையை சர்வதேச அளவிற்கு முன்னேற்றும் முயற்சியாக FINAS அமைப்பில் தனி அனிமேஷன் பிரிவு உருவாக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிகழ்வில் Teo Nie Ching, தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்துக் அப்துல் ஹலிம் ஹம்சா, தகவல் தொடர்பு மற்றும் படைப்பாற்றல் துறை துணை செயலாளர் டத்தோ பாரியா முகமது தமிழ், மற்றும் Azmir Saifuddin Mutalib உள்ளிட்ட அமைச்சக உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாதாந்திர கூட்டம், தகவல் தொடர்பு மற்றும் படைப்பாற்றல் துறைகளை மேலும் வலுப்படுத்த அமைச்சகமும் அதனுடன் இணைந்த அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முக்கிய தளமாக அமைந்தது.

