
உள்ளூர் பிரபலங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள், பிரத்யேக இசை வெளியீடுகள் மற்றும் நேரடி கொண்டாட்டங்கள் என ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது ஆஸ்ட்ரோ.

கோலாலம்பூர், 21 அக்டோபர் 2026: தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், குடும்பச் சந்திப்பு மட்டுமல்லாமல், மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பகிர்ந்துகொள்ளும் தருணங்களும் முக்கியமானவை. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை மேலும் உற்சாகமாக்கும் நோக்கில், ‘ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளில் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மலேசியர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது ஆஸ்ட்ரோ.

தனது 30 ஆண்டு காலப் பயணத்தைக் கொண்டாடி வரும் ஆஸ்ட்ரோ, இந்தத் தீபாவளியை முன்னிட்டு 75 மணிநேரத்திற்கும் அதிகமான பண்டிகைக்காலப் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது. தொலைக்காட்சி, Astro GO, On Demand மற்றும் sooka ஆகிய தளங்கள் வழியாக உள்ளூர் தயாரிப்புகள் முதல் இந்தியாவின் புதிய திரைப்படங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக, ‘சோனி விழா’ (அலைவரிசை 220) என்ற புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபலமான நாடகங்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் ரசிக்கும் வாய்ப்பை இந்த அலைவரிசை வழங்குகிறது.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறுகையில், ஆஸ்ட்ரோவின் 30 ஆண்டுகாலப் பயணத்தில் மலேசியர்களுடன் இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம் என்றும், பொழுதுபோக்கின் மூலம் மக்களை ஒன்றிணைப்பதில் தீபாவளி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார்.

உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள், ஆஸ்ட்ரோவின் பிரத்யேகத் தயாரிப்புகள் மற்றும் இந்தியாவின் பிரபலமான திரைப்படங்கள் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் பண்டிகைக்கால நிகழ்ச்சிகள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுடன் புதிய நிகழ்ச்சிகள்
இந்தத் தீபாவளிக்கு ஆஸ்ட்ரோவின் உள்ளூர் தமிழ் தயாரிப்புகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளன.
‘தீபாவளி கொண்டாட்டம்’ இசை நிகழ்ச்சி, ‘சவாலை சமாளி’ விளையாட்டு நிகழ்ச்சி, ‘அடைக்கலம்’ மற்றும் ‘மாய ஓவியன்’ தொலைக்காட்சித் திரைப்படங்கள், ‘அப் க்ளோஸ் அண்ட் பெர்சனல் வித் சைந்தவி’ இசை நிகழ்ச்சி, ‘காதல் அன்ஃபாலோ’ குடும்பத் தொடர் எனப் பல புதிய படைப்புகள் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளன.
புதிய திரைப்படங்களின் அணிவகுப்பு
திரைப்பட ரசிகர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பானதாக அமையவுள்ளது.
தமிழில் ‘கட்டா குஸ்தி 2’, ‘ராம் அண்ட் லீலா’, ‘ஜி.டி.என்.’, ‘இம்மார்டல்’, ‘மகுடம்’, ‘இதயம் முரளி’ உள்ளிட்ட திரைப்படங்கள் முதல் முறையாகத் திரையிடப்படுகின்றன.
மலையாள ரசிகர்களுக்காக ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’, ‘சர்வம் மாயா’ ஆகிய திரைப்படங்களும், தெலுங்கு ரசிகர்களுக்காக ‘குபேரா’, ‘சரிபோதா சனிவாரம்’ உள்ளிட்ட படங்களும் இடம்பெறுகின்றன.
இதனுடன் JFW திரைப்பட விருதுகள் 2026 மற்றும் ‘தேனிசை இரவு வித் தேனிசை தென்றல் தேவா – லைவ் இன் கான்சர்ட்’ போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் ரசிகர்களைக் கவரக் காத்திருக்கின்றன.
ராகாவின் இசையிலும் சமூகப் பணியிலும் தீபாவளி உற்சாகம்
வானொலி ரசிகர்களுக்காக ராகாவும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன் இசையில், சந்தேஷ் மற்றும் பிரியா இணைந்து பாடியுள்ள ‘தாம் தூம் தீபாவளி’ என்ற பிரத்யேகப் பாடல் இந்தப் பண்டிகைக்காலத்தின் இசை விருந்தாக அமையவுள்ளது.
மேலும், ‘ஹந்து ராகா’ என்ற சிறப்புக் குறுந்தொடரும் ரசிகர்களுக்காக இடம்பெறுகிறது.
அதேவேளை, ‘கலக்கல் காலை’ நிகழ்ச்சியின் ‘டுயிட் தீபாவளி பாய் கலக்கல் காலை’ முன்னெடுப்பின் மூலம், தேவைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் உதவியையும் வழங்கும் சமூக நலச் செயல்பாடுகளிலும் மலேசியர்கள் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.
பிரபலங்களுடன் நேரடி தீபாவளிக் கொண்டாட்டம்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நேரடி தீபாவளி நிகழ்வுகளையும் ஆஸ்ட்ரோ ஏற்பாடு செய்துள்ளது.
காஷ் வில்லன், சீலன், தாஷா, மூன் நிலா, திவ்யா கியா உள்ளிட்ட பிரபலங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் ரசிகர்களுக்குக் கிடைக்கவுள்ளது.
நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்:
- அக்டோபர் 24: மாலை 6 மணி முதல் ஷா ஆலம், எம்.பி.எஸ்.ஏ அரங்கத்தில் தீபாவளி கொண்டாட்டம்.
- அக்டோபர் 30: புக்கிட் ஜலில் விளையாட்டு அரங்கத்தின் கார் நிறுத்துமிடம் B-யில் தீபாவளி கார்னிவல் 2026.
- அக்டோபர் 31: பிரிக்பீல்ட்ஸ், கலாமண்டபத்தில் ECR இந்திய ஷாப்பிங் கார்னிவல்.
பொழுதுபோக்கு, இசை, திரைப்படங்கள், பிரபலங்களுடனான சந்திப்பு மற்றும் சமூக நலச் செயல்பாடுகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் இந்த ஆண்டு தீபாவளியை மலேசியர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் வகையில் ஆஸ்ட்ரோ தனது ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
ஆஸ்ட்ரோவின் ‘ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ தீபாவளிப் பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு content.astro.com.my என்ற இணையத்தளத்தை நாடலாம்.


