
குழந்தைகள் தங்களது ஆர்வங்களை ஆராய்ந்து, திறமைகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை கனவு காண ஊக்குவிக்கும் வகையில் Astro Home of Kids மீண்டும் பல நகரங்களில் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டின் “Discover Your Dreams” – “உங்கள் கனவுகளைக் கண்டறியுங்கள்” என்ற கருப்பொருளுடன் நடைபெறும் Astro Home of Kids நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் பயனுள்ள அனுபவங்களையும் ஒரே நேரத்தில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரை பினாங்கு Queensbay Mall-ல், தினமும் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.
Astro, Nickelodeon, NickJr., Pinkfong மற்றும் CoComelon ஆகியவற்றுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், Hari Kebangsaan கொண்டாட்டத்தை முன்னிட்டு Paw Patrol, Pinkfong, CoComelon, Didi & Friends, Makania, Oga மற்றும் The Eggies உள்ளிட்ட பிரபலமான கதாபாத்திரங்களையும் குழந்தைகள் நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
Astro நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி Christinne Lim கூறுகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் பெரிய கனவுகளைக் காணவும், தங்களது ஆர்வங்களை ஆராயவும், திறமைகளை கண்டறியவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார்.
Home of Kids நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதுடன், அவர்கள் விரும்பும் கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் மூலம் குடும்பங்களை மேலும் நெருக்கமாக்குவதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், Hari Kebangsaan மற்றும் Malaysia Day கொண்டாட்டங்களுடன் இணைந்து, இளம் மலேசியர்கள் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணவும், நாட்டின் மீதான பெருமை மற்றும் உயர்ந்த இலக்குகளை வளர்த்துக் கொள்ளவும் இந்த நிகழ்ச்சி உதவும் என அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள்
Astro Home of Kids நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன:
- Mascot Performances: பிரபலமான குழந்தைகள் நிகழ்ச்சிகளின் கதாபாத்திரங்களின் மேடை நிகழ்ச்சிகள்.
- Meet & Greet: குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு.
- Kids Activity Stations: படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வளர்க்கும் நேரடி செயல்பாடுகள்.
- “Himpunan Cita-cita” Kids Parade: பல மழலையர் பள்ளிகளுடன் இணைந்து Astro Kasih ஏற்பாடு செய்யும் சிறப்பு அணிவகுப்பு. இதில் முன்பள்ளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அணிவகுப்பை Pa&Maவழிநடத்துகிறது.
- Special Giveaways: Astro நிறுவனத்தின் கூட்டாளர்களிடமிருந்து சிறப்பு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு.
Astro வாடிக்கையாளர்கள் MyAstro செயலியை Astro Booth-ல் காண்பிப்பதன் மூலம், Meet & Greet நிகழ்ச்சிகளுக்கான Fast Lane அணுகலைப் பெறலாம்.
அடுத்த நகரங்கள்
பினாங்கைத் தொடர்ந்து Astro Home of Kids பல நகரங்களுக்கு பயணம் செய்யவுள்ளது.
- Pavilion Damansara Heights – 6 முதல் 8 நவம்பர் 2026
- Johor Bahru – 4 முதல் 6 டிசம்பர் 2026
- Sunway Pyramid – 24 முதல் 27 டிசம்பர் 2026
இதன் மூலம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் வேடிக்கை, கற்றல் மற்றும் கனவுகளை ஆராயும் அனுபவத்தை வழங்க Astro திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் நேர்மறையான பார்வை அனுபவத்தை உருவாக்குவதற்காக Astro, Parental Controls மற்றும் Kids-Friendly Profile போன்ற வசதிகளையும் வழங்குகிறது. Astro X3 மற்றும் Astro One TV Packs மூலம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக 6 சேனல்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான On Demand காணொளிகள்கிடைக்கின்றன.
Astro Home of Kids – “Discover Your Dreams” நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் குடும்பமாக கலந்து கொண்டு, அவர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை வழங்கலாம்.


