
மலேசிய தமிழ் திரைப்பட ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இயக்குநரும் கார்த்திக் ஷாமலனின் புதிய திரைப்படமான “பூவெல்லாம் கேட்டுப்பார் (PKP)” வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஜூன் 25, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மர்மம், உணர்ச்சி மற்றும் குடும்ப பின்னணியுடன் உருவாகும் இந்த திரைப்படம், மலேசிய தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ஷாமலன் தனது முந்தைய படைப்புகளின் மூலம் தனித்துவமான கதைக்களத்தையும் ஆழமான உணர்வுகளையும் ரசிகர்களிடம் கொண்டு சென்றவர். அதேபோல் “பூவெல்லாம் கேட்டுப்பார்” திரைப்படமும் வலுவான கதை, உணர்ச்சிமிக்க நடிப்பு மற்றும் தரமான திரைக்காட்சிகளுடன் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
திரைப்பட ரசிகர்கள் பலரும் இந்த படத்தை 2026ஆம் ஆண்டின் முக்கிய மலேசிய தமிழ் திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாகவே பார்க்க தொடங்கியுள்ளனர்.மேலும் திரைப்படம் தொடர்பான அப்டேட்கள், டிரெய்லர் மற்றும் பிரத்யேக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

