Friday, May 15, 2026
HomeUncategorizedமலேசியத் தமிழ் கலை உலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திரம் சத்யாக்கு கோலாலம்பூரில் சிறப்பான கௌரவ விழா

மலேசியத் தமிழ் கலை உலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திரம் சத்யாக்கு கோலாலம்பூரில் சிறப்பான கௌரவ விழா

மலேசியத் தமிழ் கலை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர் சதியா @ பேபி ஃபேஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற “நன்றி சொல்ல உனக்கு” நன்றியரங்க நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள விஸ்மா துன் சம்பந்தன் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நான் ஒரு மலேசியன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, PRM Studios வெளியீட்டிலும் Karthik Entertainment ஒத்துழைப்புடனும் நடைபெற்றது. மலேசியத் தமிழ் கலை உலகின் பல்வேறு பிரபலங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சத்யா அவர்களுக்கு தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு இசை, நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறின. சத்யா அவர்களின் கலைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு காணொளி காட்சிகளும் திரையிடப்பட்டன. பல கலைஞர்கள் மேடையேறி, அவருடன் பகிர்ந்த அனுபவங்களையும் அவரது கலைத்திறமை, எளிமை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியும் உரையாற்றினர்.

Lockup Xavier, Lockup Nathan, Maney Villanz, Kash Villanz, Kavimaran, Coco Nantha, OG Dass, P. Jegan, Hariharan, Dato Geethanjali G, Yuwa Ji, KK Khanna, Sara Raman, AG Paranjothy, Gayathrithandapany, Iswari, MGR Vijayasegar, Shanmugam, Ramesh உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் Natyanjali Arts Academy Association மற்றும் KJ Dance Group ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

நிகழ்ச்சியின் நிறைவில், உணர்ச்சி வசப்பட்ட சத்யா அவர்கள், தமக்கு ஆதரவு அளித்த குடும்பத்தினருக்கும், கலை உலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த “நன்றி சொல்ல உனக்கு” நிகழ்ச்சி, மலேசியத் தமிழ் கலை உலகில் ஒரு கலைஞருக்கான அன்பும் மரியாதையும் எவ்வளவு ஆழமானது என்பதை வெளிப்படுத்திய மறக்கமுடியாத இரவாக அமைந்தது.

RELATED ARTICLES

Most Popular