
பெரிய அளவிலான outdoor events-க்கும் டீசல் ஜெனரேட்டர் இல்லாமல் பேட்டரி மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்பதை GoRental Global நிறுவனம் Outdoor Expo Malaysia 2026 மூலம் நிரூபித்துள்ளது.
கடந்த 7 முதல் 9 ஆகஸ்ட் வரை Titiwangsa Stadium-ல் நடைபெற்ற Outdoor Expo Malaysia-வில், GoRental மொத்தம் 67 portable battery energy storage systems-ஐ பயன்படுத்தி கண்காட்சியின் தற்காலிக மின்சார தேவைகளை பூர்த்தி செய்தது.

இந்த முயற்சிக்காக GoRentalக்கு “Largest Outdoor Exhibition Powered End-to-End by Portable Battery Energy Storage Systems” என்ற ASEAN Record அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த சாதனை அங்கீகாரம் நிகழ்வின் நிறைவு நிகழ்ச்சியில் GoRental Global Managing Director Colin Pehஅவர்களிடம் அமைச்சர் Hannah Yeoh வழங்கினார்.

803 கிலோ CO₂e குறைப்பு!
36 மணி நேரம் நடைபெற்ற இந்த deployment மூலம் சுமார் 992.16 kWh மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வழக்கமான டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது சுமார் 297.65 லிட்டர் டீசல் பயன்பாடு மற்றும் 803.65 kg CO₂e கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதோடு, battery-powered temporary power பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான diesel generator முறையுடன் ஒப்பிடும்போது 30% வரை செலவைக் குறைக்க முடியும் என்றும் GoRental தெரிவித்துள்ளது.

சத்தமும் புகையும் குறையும்
இந்த புதிய முறையின் முக்கிய நன்மைகளில் ஒன்று குறைந்த சத்தம் மற்றும் on-site exhaust emissions இல்லாதது. இதனால் exhibitors, visitors, event workers மற்றும் அருகிலுள்ள சமூகங்களுக்கு மேலும் வசதியான சூழலை உருவாக்க முடியும் என நிறுவனம் கூறுகிறது.
Outdoor Expo Malaysia நிறுவனர் Fathee Razali, பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு power reliability மிகவும் முக்கியம் என்றும், இந்த முயற்சி நம்பகமான மின்சாரத்தை வழங்கியதுடன் சத்தம் மற்றும் மாசுபாட்டையும் குறைத்துள்ளதாக தெரிவித்தார்.
மலேசியாவில் மட்டுமல்லாமல், தென்கிழக்கு ஆசியாவிலும் events, campsites, construction sites, commercial operations மற்றும் critical infrastructure போன்ற துறைகளில் portable battery energy storage systems பயன்பாட்டை விரிவுபடுத்த GoRental திட்டமிட்டுள்ளது.
Outdoor Expo Malaysia 2026-ன் இந்த முயற்சி, எதிர்காலத்தில் பெரிய நிகழ்வுகளுக்கான மின்சார தேவையை டீசல் ஜெனரேட்டர்களுக்கு அப்பாற்பட்டு சுத்தமான மற்றும் அமைதியான முறையில் பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கான ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது.


