Wednesday, September 30, 2026
spot_img
HomeHealth & FitnessLotus’s Ceria Charity Run 2026: RM500,000 நிதி திரட்டல்

Lotus’s Ceria Charity Run 2026: RM500,000 நிதி திரட்டல்

Lotus’s Malaysia ஏற்பாடு செய்த நான்காவது Lotus’s Ceria Charity Run 2026 (CCR’26) நிகழ்வில் 5,000 பேர் பங்கேற்று, சாதனை அளவாக RM500,000 நிதி திரட்டப்பட்டது.

Lotus’s Ara Damansara-வில் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயம், Lotus’s – PINTAR SMART Up School Programme திட்டத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது. இந்த நிதி மாணவர்களின் நிதி அறிவை மேம்படுத்தும் கல்வித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Smart Shopper Plus திட்டத்தின் மூலம் இதுவரை 7 மாநிலங்களில் உள்ள 21 பள்ளிகளைச் சேர்ந்த 2,394 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு முதன்முறையாக 21.1 கி.மீ. Competitive Half Marathon அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. Shop & Run பிரிவுகளும் இடம்பெற்றன.

Lotus’s Malaysia மற்றும் PINTAR Foundation இணைந்து 2030ஆம் ஆண்டுக்குள் 50,000 மாணவர்களை சென்றடையும் இலக்கை முன்னெடுத்து வருகின்றன.

RELATED ARTICLES

Most Popular