
மலேசிய அரசாங்கத்தின் மக்கள் நல திட்டங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் mySalam திட்டம், B40 மற்றும் தகுதி பெற்ற M40 மக்களுக்கு முக்கியமான சுகாதார பாதுகாப்பு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ஒருமுறை RM8,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த உதவி தொகை, புற்றுநோய், இதய நோய், ஸ்ட்ரோக் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடுமையான நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை மற்றும் தேவையான ஆவணங்களை mySalam இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால், உதவி தொகை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் RM50 வீதம், அதிகபட்சம் 14 நாட்கள் வரை மருத்துவமனை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு RM700 வரை பெற முடியும்.
இந்த திட்டத்திற்கு STR பெறுநர்கள் மற்றும் அரசின் தகுதி பட்டியலில் உள்ளவர்கள் தானாகவே சேர்க்கப்படுகின்றனர். 18 முதல் 65 வயதுக்குள் உள்ள மலேசியர்கள் இதில் பயன்பெறலாம்.
தங்களின் தகுதியை சரிபார்க்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ mySalam இணையதளத்தின் மூலம் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
இந்த திட்டம், குறிப்பாக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் இந்திய சமூகத்தினருக்கும் பெரும் நிவாரணமாக பார்க்கப்படுகிறது.

