Sunday, May 31, 2026
Homeஇந்திய சமூகத்திற்காக ரிம.65.5 மில்லியன் ஒதுக்கீடு – மித்ரா கேசுமா சிறப்பு அறிவிப்பு

இந்திய சமூகத்திற்காக ரிம.65.5 மில்லியன் ஒதுக்கீடு – மித்ரா கேசுமா சிறப்பு அறிவிப்பு

மலேசிய இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மித்ரா (MITRA) அமைப்பின் கீழ் மொத்தமாக RM65.5 மில்லியன்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய சமூகத்திற்கு உதவும் 6 முக்கிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி முன்முயற்சிகள்

1. செலிக் மடானி(Celik Madani)

B40 இந்திய குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • பள்ளி கட்டணம் மற்றும் காலை உணவுக்காக மாதம் RM230 உதவி
  • சுமார் 4,000 மாணவர்கள் பயன் பெறுவர்
  • மொத்த ஒதுக்கீடு: RM10 மில்லியன்

2. கல்வி மடானி (Kalvi Madani)

SPM மற்றும் STPM படிக்கும் B40 மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஊக்கத் திட்டம்.

  • கல்வி ஆதரவு மற்றும் உந்துதல் பயிற்சிகள்
  • 5,000 மாணவர்கள் இலக்கு
  • ஒதுக்கீடு: RM5 மில்லியன்
  • விண்ணப்பம் திறப்பு: 5 ஜூன் 2026

தொழில்முனைவோர் முன்முயற்சி

3. உயர்வு மடானி (Uyarvu Madani)

B40 மற்றும் M40 இந்திய தொழில்முனைவோருக்கான Startup Accelerator திட்டம்.

  • ஒருமுறை உதவித் தொகை RM50,000 வரை
  • 500 சிறு தொழில்முனைவோர் பயன்பெறுவர்
  • மொத்த ஒதுக்கீடு: RM25 மில்லியன்
  • விண்ணப்பம் திறப்பு: 29 ஜூன் 2026

சுகாதார முன்முயற்சி

4. ஆரோக்கிய மடானி (Arogya Madani)

சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சை பெறும் B40 மற்றும் M40 நோயாளிகளுக்கான உதவி.

  • ஆண்டுக்கு ஒருவருக்கு RM5,000 உதவி
  • 1,300 நோயாளிகள் பயன் பெறுவர்
  • ஒதுக்கீடு: RM6.5 மில்லியன்
  • விண்ணப்பம் திறப்பு: 5 ஜூன் 2026

சமூக நல முன்முயற்சி

5. துணை மடானி (Thunai Madani)

இந்திய சமூகத்தைச் சேர்ந்த B40 மக்களுக்கு நேரடி நிதி மற்றும் சமூக நல உதவி.

  • ஒருமுறை RM5,000 வரை உதவி
  • 10,000 பயனாளிகள் இலக்கு
  • ஒதுக்கீடு: RM17 மில்லியன்
  • விண்ணப்பம் திறப்பு: 5 ஜூன் 2026

மடானி ரக்யாட் சமூக திட்டம்

6. மதானி ரக்யாட் – இந்திய சமூக திட்டம்

இந்திய மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சமூக மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

  • 9 மாநிலங்களில் 38 பகுதிகள் தேர்வு
  • மொத்த ஒதுக்கீடு: RM1.7 மில்லியன்

இந்த திட்டங்கள் மூலம் இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular