Monday, November 23, 2026
spot_img
HomeBusinessதீபாவளியை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸில் DBKL ஏற்பாட்டில் முதல் முறையாக மெகா சந்தை !

தீபாவளியை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸில் DBKL ஏற்பாட்டில் முதல் முறையாக மெகா சந்தை !

கோலாலம்பூர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள மெகா தீபாவளி சந்தை , பிரிக்ஃபீல்ட்ஸில் பொதுமக்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த பஜாரை ஏற்பாடு செய்வதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு கருத்துகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, படிப்படியாக மேம்படுத்தப்பட்டதாக DBKL தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மழை, கடுமையான வெயில், சந்தை செயல்பாட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. கடந்த வார இறுதியில் சந்தைக்கு வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை நேரில் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த ஒரு மாதமாக பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்துவதற்காக கூடுதல் நேரம் பணியாற்றிய DBKL களப்பணிக் குழுவினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உள்ளூர் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் நோக்கில், DBKL அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மெகா தீபாவளி சந்தை வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மெகா சந்தைரயில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, பண்டிகைக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular