Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் மலாயு சுபாங் மக்களுக்கு சொந்தப் பணத்திலும் உதவி – ரமணன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் மலாயு சுபாங் மக்களுக்கு சொந்தப் பணத்திலும் உதவி – ரமணன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் மலாயு சுபாங் பகுதி மக்களுக்கு உதவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதுடன், தனது சொந்தப் பணத்திலிருந்தும் உதவிகளை வழங்கி வருவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் உணவுப் பொருட்கள், மெத்தைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஷா ஆலமில் உள்ள டேவான் சியாத்தான் தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும், யாரும் கவலைப்படத் தேவையில்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதுடன், எனது சொந்தப் பணத்திலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறேன். உணவுப் பொருட்கள், மெத்தைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

மனிதவள அமைச்சருமான ரமணன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கு மேலும் என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரையும் எனது அதிகாரிகள் நேரில் சந்தித்து, அவர்களுக்கு என்ன வகையான கூடுதல் உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தியுள்ளேன்,” என்றார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடித் தேவைகளை அறிந்து, அவர்களுக்குத் தேவையான கூடுதல் உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular