Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessமலேசியத் தமிழ் சினிமாவின் 35 ஆண்டுகால வரலாறு – ‘நான் ஒரு மலேசியன்’ சிறப்பு விழா...

மலேசியத் தமிழ் சினிமாவின் 35 ஆண்டுகால வரலாறு – ‘நான் ஒரு மலேசியன்’ சிறப்பு விழா கோலாகலம்!

மலேசியத் தமிழ் திரைப்படத் துறையின் 35 ஆண்டுகாலப் பயணத்தையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில், ‘நான் ஒரு மலேசியன் – 35 Years Celebration 2026’ சிறப்பு நிகழ்ச்சி ஆம்பாங் டேவான் ரசாலியில் சிறப்பாக நடைபெற்றது.

MKU Malaysia Kalai Ulagam மற்றும் Naan Oru Malaysian Online Media இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து சிறப்பித்தார்.

1991 முதல் 2026 வரையிலான மலேசியத் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பயணத்தை நினைவுகூரும் வகையில், பழைய திரைப்பட நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் சந்திப்பு, சிறப்பு இசை நிகழ்ச்சி, நினைவுப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்தச் சந்திப்பு மலேசியத் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்த கலைஞர்களை மீண்டும் ஒன்றிணைத்ததுடன், அவர்களின் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

மலேசியத் தமிழ் சினிமாவின் வரலாற்றையும் கலைஞர்களின் பங்களிப்பையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த 35ஆம் ஆண்டு கொண்டாட்டம் அமைந்தது.

35 ஆண்டுகள் கடந்தாலும், மலேசியத் தமிழ் சினிமாவின் பயணம் தொடரட்டும்!

RELATED ARTICLES

Most Popular