
2027ஆம் ஆண்டு புதிய பள்ளிக் கல்வித் திட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகளில் வாரத்திற்கு 12 தமிழ்மொழிப் பாடவேளைகள் தொடர்ந்து இடம்பெறும் எனக் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தேசியப் பள்ளிகளில் மலாய் மொழிக்கும், சீனப்பள்ளிகளில் சீன மொழிக்கும், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழிக்கும் தலா 12 பாடவேளைகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்மொழிப் பாடவேளைகளை 12-லிருந்து 10 ஆகக் குறைக்கும் முன்மொழிவுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிற்குக் கடிதம் அனுப்பியதுடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் அதன் நகலை அனுப்பியிருந்தார்.
தற்போதைய அறிவிப்பு தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்மொழிக் கல்வி தொடர்வதை உறுதிப்படுத்தும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.


