Friday, November 20, 2026
spot_img
HomeBusinessஅரசுப் பணிகளில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் இணைய வேண்டும் – அந்தோனி லோக் வலியுறுத்த

அரசுப் பணிகளில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் இணைய வேண்டும் – அந்தோனி லோக் வலியுறுத்த

இந்திய இளைஞர்கள் அதிகளவில் அரசுப் பணிகளில் இணைந்து, நாட்டின் உயரிய நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 30 ஆண்டுகால அரசுப் பணி அனுபவம் கொண்ட ஜனசந்திரன், நாட்டின் உயரிய நிர்வாகப் பதவிகளில் ஒன்றை வகிப்பது இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

வணிகம், தனியார் துறை மட்டுமின்றி அரசுப் பணி, தூதரகம் மற்றும் கொள்கை உருவாக்கம் போன்ற துறைகளிலும் இந்திய இளைஞர்கள் தங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அந்தோனி லோக் இவ்வாறு தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular