
இரண்டு அண்டைத் தோட்டப் பகுதிகளுக்கு இடையே நடைபெற்று வந்த கால்பந்துப் போட்டி, தவறான புரிதல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறாமல் முடங்கிக் கிடந்தது.
இந்நிலையில், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இரு சமூகங்களும் மீண்டும் ஒன்றிணைந்து கால்பந்துப் போட்டியை ஏற்பாடு செய்கின்றன. அப்போது யாரும் எதிர்பாராத உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வருகிறது. போட்டியில் எதிரெதிர் அணிகளாகக் களமிறங்கியவர்கள் உண்மையில் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது தெரியவருகிறது.
இதற்கிடையே, போட்டியைக் காண அவர்களின் தாயார் வருகை தருவது கதையில் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தாயின் வருகையால் உணர்ச்சிவசப்படும் சகோதரர்கள், இறுதியில் தங்களுக்குள் இருந்த பிரிவினைகளையும் மனக்கசப்புகளையும் மறந்து மீண்டும் ஒன்றிணைகின்றனர்.
குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி விளம்பரம் (TVC), போட்டி, பகைமை மற்றும் தவறான புரிதல்களைக் காட்டிலும் குடும்பப் பாசமும் ஒற்றுமையுமே வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.
பகைமையை விட பாசம் பெரிது; பிரிவை விட குடும்ப உறவே சிறந்தது!
🎬 TVC காணொளியைக் காண: https://youtu.be/JpMN3IyVMB8?si=Pu-s2SlAoTyOayem


