Tuesday, November 24, 2026
spot_img
HomeBusinessபிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் தீ விபத்து – இரு பெண்கள் காயம்; ஒருவர் கை எலும்பு முறிவால்...

பிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் தீ விபத்து – இரு பெண்கள் காயம்; ஒருவர் கை எலும்பு முறிவால் பாதிப்பு!

கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இந்தியப் பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3.04 மணியளவில் நிகழ்ந்துள்ளது. தீ விபத்து தொடர்பான அவசர அழைப்பு NG999 அவசர அழைப்பு முறைமை மூலம் கிடைத்ததைத் தொடர்ந்து, ஹாங் துவா, பந்தாய் மற்றும் செபுதே தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகாலை 3.08 மணியளவில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த தீயணைப்புப் படையினர், இரண்டு மாடிகளைக் கொண்ட இரண்டு உணவகக் கடைகளில் தீ பரவியிருந்ததைக் கண்டறிந்தனர். ஒவ்வொரு கடையும் 20 x 60 அடி பரப்பளவைக் கொண்டதாகும்.

இந்தத் தீ விபத்தில் கீழ்தளத்தில் 100 விழுக்காடும், மேல்தளத்தில் 50 விழுக்காடும் தீயினால் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 34 வயதுடைய பெண் ஒருவரின் வலது கையிலும், 24 வயதுடைய மற்றொரு பெண்ணின் இடது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 24 வயதுடைய பெண்ணின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இருவருக்கும் சம்பவ இடத்திலேயே ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவசர மருத்துவக் குழுவின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையின் விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

TRAVEL WITH ATM | தமிழ் செய்திகள்

RELATED ARTICLES

Most Popular