Monday, November 23, 2026
spot_img
HomeBusinessசிலாங்கூர் வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாளை முதல் RM2,500 சிறப்பு நிதியுதவி!

சிலாங்கூர் வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாளை முதல் RM2,500 சிறப்பு நிதியுதவி!

பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதல் சிறப்பு ரொக்க நிதியுதவியாக RM2,500 வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி நாளை முதல் (நவம்பர் 10) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தினால் வீடுகளில் சேதமடைந்த அல்லது முற்றிலும் அழிந்த அத்தியாவசியப் பொருட்களை மீண்டும் வாங்குவதற்கு உதவும் நோக்கில் இந்தக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தகுதிக்கான நிபந்தனைகள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட செயலாக்க முகவர் அமைப்புகள் விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிலாங்கூரில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular