Monday, November 23, 2026
spot_img
HomeBusiness“வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைவோம்; ஒற்றுமையால் வெற்றிகளைப் படைப்போம்” – தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் துணை அமைச்சர்...

“வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைவோம்; ஒற்றுமையால் வெற்றிகளைப் படைப்போம்” – தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் துணை அமைச்சர் யூனேஸ்வரன்

தீபாவளித் திருநாள் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், ஒவ்வொரு இதயத்திலும் அன்பு, நம்பிக்கை மற்றும் நல்வாழ்வையும் மலரச் செய்யட்டும் எனத் துணை அமைச்சர் மாண்புமிகு யூனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இத்திருநாளில் அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சி பெருகவும், மக்களிடையே அன்பும் கருணையும் வளரவும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறவும் வாழ்த்தியுள்ளார்.

மேலும், இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையின் வலிமையால் வெற்றிகளைப் படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைவருக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular