
கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது, அங்கு சட்டங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எவ்வாறு விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக வரும் 2026 நவம்பர் 30ஆம் தேதி (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தை அறிந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியக் குடிமக்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்றாடப் பணிகள் என்ன? நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்கள் எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன? நாட்டின் முக்கிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு நேரடியாகப் பதில்களை அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும்.
தொலைக்காட்சி மற்றும் செய்திகளின் வாயிலாக மட்டுமே நாடாளுமன்றத்தை அறிந்துகொள்ளாமல், நேரில் சென்று அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விபரங்கள்:
- தேதி: 30 நவம்பர் 2026 (திங்கட்கிழமை)
- நேரம்: காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
- பங்கேற்பு: 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியக் குடிமக்கள்.


