
கோலாலம்பூர்: தீபாவளிப் பண்டிகையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மெக்டொனால்ட்ஸ் மலேசியா (McDonald’s Malaysia) நாடு முழுவதும் சிறப்பு தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

‘Mekdi Open House – Deepavali Nalvaazhthukkal’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொண்டாட்டம் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்டொனால்ட்ஸ் கிளைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 அல்லது 9 மணி வரை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள்:
நவம்பர் 13, 2026
- கோலாலம்பூர் – McDonald’s Danau Kota DT (மாலை 6 மணி – இரவு 9 மணி)
- பேராக் – McDonald’s Meru Raya DT (மாலை 6 மணி – இரவு 8 மணி)
நவம்பர் 14, 2026
- சிலாங்கூர் – McDonald’s Batu Caves DT (மாலை 6 மணி – இரவு 8 மணி)
- பினாங்கு – McDonald’s Greenlane DT (மாலை 6 மணி – இரவு 8 மணி)
- ஜோகூர் – McDonald’s Ulu Tiram DT (மாலை 6 மணி – இரவு 8 மணி)
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மாலை 6 மணி முதல் 7 மணி வரை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு Spicy Chicken McDeluxe Set இலவசமாக வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் 1,000 செட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
பாரம்பரிய உடையில் வருகை தரும் விருந்தினர்களுக்கு மர்மப் பரிசுகளும் காத்திருக்கின்றன.
தீபாவளியின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


