
மலாக்கா மாநிலத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற தேசிய முன்னணி (BN) கட்சிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கியுள்ள இந்த நம்பிக்கையை முழுப் பொறுப்புடன் ஏற்று, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் BN பாடுபடும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இனி நாம் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. மெலாகா மாநில அரசாங்கத்துடன் மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதுடன் அனைத்து மக்களின் நலனையும் உறுதிப்படுத்தும்,” என அவர் தனது Facebook பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேர்தல் பணிகளில் கடுமையாக உழைத்த பக்கத்தான் ஹராப்பான் (PH) தேர்தல் இயந்திரம் மற்றும் அதன் அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மெலாகா மாநிலத்தின் 16ஆவது மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி (BN) 21 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் (PH) நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


