
கிழக்குக் கடற்கரை ரயில் திட்டத்தின் (ECRL) மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதியுதவியை ஆதரிக்கும் வகையில், RM19.05 பில்லியன் மதிப்பிலான மலேசியா ரயில் இணைப்பு நிறுவனத்தின் (MRL) ஐந்தாவது சுகுக் நிதித் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகவலை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் சுகுக் பத்திரங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (UN SDG) இணங்கும் நிலையான வளர்ச்சி இலக்கு சுகுக் (SDG Sukuk) வகையில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இதன் மூலம் ECRL ரயில் திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவியைத் திரட்டுவதுடன், நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிதி நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


