Wednesday, November 25, 2026
spot_img
HomeBusinessPUBLIC GOLD ATM – RHB, BONUSLINK இணைந்து புதிய திட்டம்: புள்ளிகள் மூலம் தங்கம்...

PUBLIC GOLD ATM – RHB, BONUSLINK இணைந்து புதிய திட்டம்: புள்ளிகள் மூலம் தங்கம் வாங்கும் வாய்ப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 25, 2026 – அன்றாட கொள்முதல் மற்றும் பரிவர்த்தனைகள் மூலம் சேகரிக்கும் புள்ளிகளைப் பயன்படுத்தி நேரடியாகத் தங்கம் வாங்கும் புதிய வாய்ப்பை Public Gold ATM அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக RHB Bank Berhad மற்றும் BonusLink நிறுவனங்களுடன் Public Gold ATM தனது மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்ச்சி, கோலாலம்பூரில் உள்ள Menara Public Gold @ TRX-இல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் Public Gold Group நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் நெங், RHB Bank Berhad வங்கியின் வர்த்தக வங்கிப் பிரிவுத் தலைவர் ஏஞ்சீ நெங், BonusLink நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ரோஸ்னன் சியோங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டாண்மையின் மூலம், தகுதியுடைய RHB வாடிக்கையாளர்கள் மற்றும் BonusLink உறுப்பினர்கள் தங்களிடம் உள்ள புள்ளிகளை பணப் பரிசு வவுச்சர்களாக மாற்றி, மலேசியா முழுவதும் செயல்படும் 170-க்கும் மேற்பட்ட Public Gold ATM மையங்களில் கிடைக்கும் தங்கப் பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் வழக்கமான வெகுமதிகளைப் பெறுவதற்குப் பதிலாக, தங்களின் அன்றாடப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் புள்ளிகளை நேரடித் தங்கச் சொத்தாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், இந்தச் சலுகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

Public Gold ATM மையங்கள் வணிக வளாகங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்கள், Public Gold கிளைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் அமைந்துள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் தங்கம் வாங்குவது மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள Gold ATM மையத்தை அறிந்துகொள்ள Public Gold நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://publicgold.com.my/goldatm என்ற முகவரியைப் பார்வையிடலாம்.

RHB உடனான இந்தக் கூட்டாண்மை ஜூலை 2026 முதல் செயல்பாட்டில் உள்ளது. தற்போது BonusLink உடனான புதிய கூட்டாண்மையும் இணைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களின் வெகுமதிப் புள்ளிகளைத் தங்கமாக மாற்றிக்கொள்ள கூடுதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், Public Gold தனது தங்க ஏடிஎம் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான Gold ATM இயந்திரங்களை நிறுவியதற்காக 155 இயந்திரங்களுடன் Guinness World Records அங்கீகாரத்தையும் நிறுவனம் பெற்றுள்ளது.

அந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் அதன் வலையமைப்பு மொத்தம் 183 Gold ATM இயந்திரங்களாக விரிவடைந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய Public Gold Group நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் நெங், RHB மற்றும் BonusLink உடனான கூட்டாண்மை, பொதுமக்கள் தங்கத்தை எளிதாகவும் வசதியாகவும் சொந்தமாக்கிக்கொள்ள உதவும் முக்கியமான முன்னெடுப்பு என்றார்.

அன்றாட விசுவாசப் புள்ளிகளை நேரடித் தங்கத்துடன் இணைப்பதன் மூலம், தங்கம் வாங்குவதை எளிமையான மற்றும் வசதியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் நிதி நிறுவனங்கள், வெகுமதித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பிற மூலோபாயப் பங்காளிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவும் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

RHB வங்கியின் வர்த்தக வங்கிப் பிரிவுத் தலைவர் ஏஞ்சீ நெங் பேசுகையில், வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வெகுமதித் திட்டங்களை மேம்படுத்துவதில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

Public Gold ATM உடனான இந்தக் கூட்டாண்மை மூலம், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் தங்களின் விசுவாசப் புள்ளிகளை Public Gold மின்னணு வவுச்சர்களாக மாற்றி, கூடுதல் வெகுமதி வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், BonusLink நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ரோஸ்னன் சியோங் கூறுகையில், தங்களது உறுப்பினர்களுக்கு அதிக மதிப்பையும் புதிய வெகுமதி வாய்ப்புகளையும் வழங்குவதில் நிறுவனம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Public Gold ATM உடனான இந்தக் கூட்டாண்மை, உறுப்பினர்கள் சேகரித்த புள்ளிகளை நேரடித் தங்கமாக மாற்றுவதற்கான தனித்துவமான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, Public Gold ATM மூலம் வெகுமதிப் புள்ளிகளைப் பயன்படுத்தி தங்கம் வாங்கும் செயல்முறை நேரடியாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

தொழில்நுட்பம் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைகள் வாயிலாகத் தங்கம் வாங்கும் வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் Public Gold ATM நிறுவனத்தின் முயற்சிக்கு இந்த ஒப்பந்தங்கள் புதிய வலுச்சேர்த்துள்ளன.

தகுதியுடைய RHB வாடிக்கையாளர்கள் மற்றும் BonusLink உறுப்பினர்கள், தங்களுக்குக் கிடைக்கும் தங்கம் வாங்கும் வெகுமதி வாய்ப்புகள், புள்ளிகள் மாற்றும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் தகவல் தொடர்பு வழிகளை அணுகி அறிந்துகொள்ளலாம்.

RELATED ARTICLES

Most Popular