Wednesday, November 25, 2026
spot_img
HomeBusinessபுத்ராஜெயாவில் நவம்பர் 28-ஆம் தேதி இமையம் தீபாவளி கலை இரவு 2026!

புத்ராஜெயாவில் நவம்பர் 28-ஆம் தேதி இமையம் தீபாவளி கலை இரவு 2026!

புத்ராஜெயா: மலேசியத் தலைநகரின் நிர்வாக மையமான புத்ராஜெயாவில், இந்திய சமூகத்தின் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் ‘இமையம் தீபாவளி கலை இரவு 2026’ (Imayam Deepavali Gala Night 2026) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Persatuan Penjawat Awam Kaum India Putrajaya (IMAIYAM) ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி, வரும் நவம்பர் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள Dewan Damar Sari, Blok F8, Kompleks F-இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனீஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார். அவரது வருகை நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘An Evening of Elegance, Celebration & Excellence’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய உடை அணிவது (Traditional) ஆடைக் குறியீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதுடன், இந்திய சமூகத்தினரிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோருக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு RM30, சிறுவர்களுக்கு RM20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டு பேர் அமரக்கூடிய தங்க மேசைக்கான (Gold Table) கட்டணம் RM1,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்துவதற்கான கடைசி நாள் நவம்பர் 21 என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலதிக விவரங்களுக்கு சுமி (017-6413641) அல்லது மாறன் (013-4809513) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

தீபாவளியின் பாரம்பரியமும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் இந்தக் கலை இரவு, புத்ராஜெயா வாழ் இந்திய சமூகத்தினருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular