
பூச்சோங் மக்களுக்காக புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில், அமிராமிஸ் கேஷ் அண்ட் கேரி தனது 2வது கிளையை பூச்சோங் பத்து 14 பகுதியில் பிரம்மாண்டமாக திறந்து வைத்தது.

பண்டார் பூச்சோங் உத்தாமாவில் அமைந்துள்ள புதிய கிளையின் திறப்பு விழா காலை 11.00 மணி முதல் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், MIC துணைத் தலைவருமான டத்தோ எம்.சரவணன் கலந்து கொண்டு கிளையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். மேலும், ஹரேகிருஷ்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ஹரேகிருஷ்ணா பத்துமலை, டத்தோ தி.மோகன் மற்றும் துணைவியார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

புதிய கிளை திறப்பை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக இலவச பரிசுகள், சிறப்பு தள்ளுபடி சலுகைகள், அதிரடி ஆரம்ப விற்பனை மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கலந்து கொள்ளும் வகையிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

“மக்களுக்கு தரமான பொருட்களை மலிவான விலையில் வழங்குவதோடு, சிறந்த ஷாப்பிங் அனுபவத்தையும் வழங்குவதே எங்களின் நோக்கம்” என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய கிளை திறப்பின் மூலம் பூச்சோங் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அதிகமான தேர்வுகள், சிறந்த விலை மற்றும் வசதியான சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

