Thursday, September 10, 2026
spot_img
HomeBusiness‘தையல் நாயகி 2.0’ விருது விழா நாளை நடைபெறுகிறது; 50 தையல் கலைஞர்கள் கௌரவிப்பு

‘தையல் நாயகி 2.0’ விருது விழா நாளை நடைபெறுகிறது; 50 தையல் கலைஞர்கள் கௌரவிப்பு

நாட்டின் தையல் கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்படும் “Thaiyal Naayagi 2.0 Award 2026” விருது விழா மே 17ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வில், நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 தையல் கலைஞர்களுக்கு “தையல் நாயகி” விருது வழங்கி பாராட்டப்படவுள்ளது.

விமர்சகன் ஊடகமும், SP Sara Cakes and Tailoring இணைந்து நடத்தும் இந்த விழாவில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தையல் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

இதனுடன், 70 ஆண்டுகளுக்கும் மேலாக தையல் துறையில் தொடர்ந்து சேவையாற்றி வரும் ஒரு மூத்த கலைஞருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்படவுள்ளது என்பது நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். தையல் துறையில் சாதனை படைத்த பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணரும் இந்த விருது விழா, மலேசிய தையல் சமூகத்தின் வளர்ச்சிக்கும் அங்கீகாரத்திற்கும் முக்கிய தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular