Tuesday, September 15, 2026
spot_img
HomeUncategorizedPACE திட்டம்: நாட்டின் திறன் மேம்பாட்டுக்கு புதிய வேகம் – RM100 மில்லியன் ஒதுக்கீட்டுடன் 10...

PACE திட்டம்: நாட்டின் திறன் மேம்பாட்டுக்கு புதிய வேகம் – RM100 மில்லியன் ஒதுக்கீட்டுடன் 10 முக்கிய திட்டங்கள்

மலேசியாவின் மனிதவள மேம்பாடு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சும் (KESUMA) மற்றும் HRD Corp இணைந்து PACE (Progressive Acceleration for Capability & Employability) எனும் தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு RM100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் மக்களின் திறன் வளர்ச்சி, வேலைவாய்ப்பு தகுதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்கான மனிதவள தயாரிப்பை மேம்படுத்தும் 10 திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியா MADANI அரசாங்கத்தின் முக்கிய முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ராமனன் ராமகிருஷ்ணன் கூறுகையில்,
“PACE என்பது சாதாரண பயிற்சி திட்டமல்ல; இது நாட்டின் எதிர்கால பணியாளர்களை உருவாக்கும் மூலதன முதலீடுஎனத் தெரிவித்தார்.

PACE திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • திறன் அடிப்படையிலான முதலீடு
  • அனைவருக்கும் சமமான திறன் மேம்பாட்டு வாய்ப்பு
  • அளவிடக்கூடிய விளைவுகள்
  • தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு

வழங்கப்படும் முக்கிய திட்டங்கள்:

VETRI – இந்திய சமூகத்திற்கான தொழிற்திறன் மேம்பாடு
DAYA – இளைஞர் மற்றும் திறமையாளர்களுக்கான முன்னேற்றம்
ELEVATE – உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு திறன் வளர்ச்சி
DIGITAL – டிஜிட்டல் பொருளாதார திறன்கள் மற்றும் AI பயிற்சி
BORNEO – சபா, சரவாக் சமூக மேம்பாடு
NUSA – தேசிய வளர்ச்சிக்கான திறன் முன்னேற்றம்
GTB – Gig Economy துறைக்கான திறன் ஆதரவு

மேலும், இன்னும் அறிவிக்கப்படாத சில புதிய திட்டங்களும் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் இளைஞர்கள், gig பணியாளர்கள், சிறு தொழில்முனைவோர், மாநில சமூகங்கள் மற்றும் எதிர்கால பணியாளர்கள் அனைவரும் புதிய பொருளாதார மாற்றத்தில் பங்கெடுக்க முடியும்.

“வேலை கிடைப்பது மட்டுமல்ல; திறன், நம்பிக்கை, வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” என அவர் வலியுறுத்தினார்.

மலேசியா எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகும் இந்த நேரத்தில், PACE திட்டம் நாட்டின் திறன் மேம்பாட்டுக்கு புதிய வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular