Sunday, November 22, 2026
spot_img
HomeBusinessவீட்டுக் காவலில் இருக்க RM50 மில்லியன் அபராதம் செலுத்தும் நஜிப்!

வீட்டுக் காவலில் இருக்க RM50 மில்லியன் அபராதம் செலுத்தும் நஜிப்!

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்காக விதிக்கப்பட்ட RM50 மில்லியன் அபராதத்தை இன்று செலுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகையை நஜிப்பின் பிரதிநிதி ஒருவர் இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செலுத்துவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனை அடிப்படையிலான அரச மன்னிப்பைத் தொடர்ந்து, நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது.

SRC International நிறுவனத்தின் RM42 மில்லியன் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜிப்புக்கு, 2020ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular